மகாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டு இரு கண் பார்வையையும் இழந்துள்ளார். கொரோனா பரவலை எதிர்த்து போராட உலக நாடுகளுக்கு தற்போது முக்கிய கேடயமாக இருந்து வருகின்றன கோவிட் தடுப்பூசிகள். கொரோனா தடுப்பூசி பற்றி பல தவறான கருத்துக்கள் மற்றும் தகவல்கள் மக்களிடையே பரவி இருக்கின்றன.
எனினும் தொற்றின் இரண்டாம் அலை ஏற்படுத்திய பேரழிவை கண்ணால் கண்ட பிறகு நாட்டின் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். ஒரு சில பொதுவான பக்கவிளைவுகளை தடுப்பூசிகள் வெளிக்காட்டினாலும் 2 முதல் 4 நாட்களுக்குள் அவை சரியாகி விடுகின்றன.
கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு வினோதமான சில உடல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவது குறித்த சில செய்திகளை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம். தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு உடலில் காந்த சக்தி ஏற்பட்டுள்ளதாக மகாராஷ்டிராவின் நாசிக்கை சேர்ந்த அர்விந்த் சோனார் என்ற 67 வயதான முதியவர் கூறி இருந்தார்.


முதல் டோஸ் போட்டு கொண்ட போது எந்த சிக்கலும் இல்லாத தனக்கு, இரண்டாவது டோஸ் எடுத்த பிறகு தனது உடலில் காந்த சக்தி மிக அதிகமாக காணப்படுவதாக தெரிவித்திருந்தார்.