ஆட்டுக் குட்டியை விழுங்கிய 3.65 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு பிடிப்பட்டது

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இன்று (ஜூலை 15) பீஃபோர்ட்டில் உள்ள கம்போங் சுவாசாவில் ஒரு ஆட்டு குட்டியை விழுங்கிய 3.65 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்துள்ளனர். ஆடவர் ஒருவர் ஆட்டுக்குட்டியை பாம்பு விழுங்குவதை பார்த்த உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரி முகமட் அஃபெண்டி ராமின், அழைப்பைப் பெற்ற பின்னர், ஒரு குழு மலைப்பாம்பு இருந்ததாக கூறிய இடத்திற்கு அனுப்பப்பட்டது. மலைப்பாம்பு ஒரு ஆட்டுக்குட்டியை   விழுங்கிவிட்டதால் அதிகம் நகர முடியவில்லை என்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்த சம்பவத்தில் எந்த மனிதர்களும் காயமடையவில்லை என்று அஃபெண்டி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here