ரம் பற்றி தெரியாத பல விஷயங்கள்.
நீங்கள் ரம் பிரியராக இருந்தால், ரம் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
ரம் என்பது நடைமுறைக்கு வந்த முதல் பிராண்டட் மதுபானம் ஆகும். முதல் ரம் ஆனது 1620களில் கரிபியனில் வடிகட்டப்பட்டு தயாரிக்கப்பட்டது.
ஆகவே இன்று வரை இது மிகப்பெரிய ரம் டிஸ்டில்லரியாக உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, ரம் என்பது மருத்துவமல்லாத நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்டது. இதுவே உட்கொள்வதற்கான முதல் ஆல்கஹால் ஆகும். ரம்மில் உள்ள சர்க்கரையின் முக்கிய ஆதாரம் கரும்புச்சாறு. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ரம் கரும்பு சாற்றில் இருந்து வடிகட்டித் தயாரிக்கப்பட்டு கொள்கலன்களில் பதப்படுத்தப்படுகிறது.
வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, 18 ஆம் நூற்றாண்டில், ரம் பொதுவாக மாலுமிகளால் நாணயத்திற்கு பதிலாக பயன்படுத்தப்பட்டது.
அவ்வளவு பிரபலமான, விலை உயர்ந்த பானமாக 18 ஆம் நூற்றாண்டில் ரம் இருந்தது. 1970 ஆம் ஆண்டுக்கு முன்னர், ராயல் கடற்படையில் உள்ளவர்களுக்கு ரம் வழங்கப்பட்டது. ஏனெனில் பயங்கரமான ஸ்கர்வியை எதிர்த்துப் போராடுவதில் ரம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பி அவ்வாறு வழங்கப்பட்டது.
ஆனால் இயந்திரங்களுடன் பணிபுரியும் போது ரம் அருந்தினால், அது கை நடுக்கத்திற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கண்டறிந்த பின்னர், அதை தடை செய்தனர். 1800-களில் பெண்கள் தாங்கள் சந்திக்கும் முடி உதிர்வு பிரச்சனையைக் கட்டுப்படுத்துவதிலும், மெலிந்த முடியை அடர்த்தியாக்குவதிலும் ரம் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி, ரம்மை தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தனர். வேண்டுமானால் நீங்கள் இதை ஒரு ஹேர் டானிக்காக பயன்படுத்திப் பாருங்கள்.








