கொரோனா 3ஆம் அலை அபாயகரமாக இருக்கும்!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக செப்டம்பர் மாதத்துக்கு பிறகு கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.
இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவியது. மே மாதம் கொரோனா தாக்கம் உச்சத்தை தொட்டது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிந்தது. ஆக்சிஜன் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு நிலவியது.
மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்தியாவில் தற்போது தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கு கீழே வந்தது. தமிழகத்தில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 2,312 ஆக குறைந்தது.
ஆனாலும் கொரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்ப்பட்டுள்ளதால் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.
கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க நாடு முழுவதும் இதுவரை 36 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே இந்தியாவில் கொரோனா 3- ஆவது அலை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அடுத்த மாதம் இறுதியில் கொரோனா 3-வது அலை தொடங்கும் என்றும் கொரோனா வைரஸ் முன்பைவிட இனி கூடுதல் வீரியத்துடன் இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here