ஜெர்மனியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு; இதுவரை 133 பேர் பலி

ஜெர்மனி, ஜூலை 18:

ஜெர்மனியில் ஒருபோதும் இல்லாதவாறு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இதுவரை  133 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பாலங்கள் என்று மொத்தமாக அனைத்தையும் வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழக் கூடிய நிலையில் இருக்கிறது.

மேலும் மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில், இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மொத்த மழையும் இரண்டே நாட்களில் பெய்துள்ளது. இதன் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

 

கட்டடங்கள் வெள்ளத்தில் மூழ்கியும் இடிந்து விழுந்தும் காணப்படுகின்றது. இந்நாடுகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 168-ஐத் தாண்டியுள்ளது. இன்னும், காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அத்துடன் சாலைகள் சேதமடைந்துள்ளதாலும் தகவல் தொடா்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் அவா்களைத் தொடா்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

ஜெர்மனியில் சுமார் 15,000 போலீசார், இராணுவ வீரர்கள் மற்றும் அவசர நிலை பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பெல்ஜியத்தில் இதுவரை 27 பேர் இறந்துள்ளனர் என்றும் நெதர்லாந்து, லக்சம்பர்க், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here