துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற புதுப்பெண் பலி..!

ஆசை விபரீதமானது

உத்தரபிரதேசத்தின் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவர் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷூக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.

ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்கு துப்பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை.

இந்த நிலையில் குண்டு நிரப்பப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கியை தனது முன் நிறுத்தியபடி, டிரிக்கரில் கையை வைத்துக்கொண்டு செல்ஃபி எடுத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக டிரிக்கரில் கை அழுத்தியதால் குண்டு வெடித்தது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் ராதிகா சாய்ந்து கிடந்தார்.

இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here