புத்ரா ஜெயா, ஜூலை 26:
அரசாங்கம் சரியானது இல்லைத்தான், ஆனால் அது ஒன்றும் செய்யவில்லை என்று கூறுவதற்கு பதில் மக்களை தமது அரசாங்கம் துன்பப்பட விடவில்லை என்று பிரதமர் முஹிடின் யாசின் கூறினார்.
அரசாங்கப் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்றும் இதுபோன்ற கடினமான காலங்களில் ஒற்றுமையுடன் இருப்பது முகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
“எனவே, யாரும் விரல்களைக் காட்டவும் சுட்டிக்காட்டவும் தேவையில்லை. நாட்டிலுள்ள மக்கள் ஒட்டுமொத்தமாக அவதிப்படுகிறார்கள், அதே நேரத்தில் முன்னணி மற்றும் மருத்துவமனைகள் மிக அழுத்தத்தில் உள்ளன, “ என்றும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்.









