இளம் பெண் மருத்துவர் உயிரிழப்பு

நிலச்சரிவில் சிக்கினார் ! வைரலாகும் கடைசி ட்வீட்!!

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 9 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில், அதில் பலியான இளம் மருத்துவர் ஒருவரின் கடைசி ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கின்னோர் மாவட்டம் சங்லா பள்ளத்தாக்கில் ஏற்பட்ட அடிவாரத்திலிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பெரிய பாறைகள் விழுந்தன. இந்த நிலச்சரிவில் 9 பேர் வரை உயிரிழந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்தில் இளம் பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். ஆயூர்வேத மருத்துவரான தீபா சர்மா தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இமாச்சல் பிரதேசம் சென்றிருந்தார் .

இமாச்சலப் பிரதேசத்தின் நாகஸ்தி பகுதியில் நின்ற படி பல படங்களை எடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . அந்த பதிவில் பொதுமக்கள் செல்லக்கூடிய இந்தியாவின் கடைசி எல்லையில் நின்று கொண்டிருக்கிறேன் .

இந்த எல்லையைத் தாண்டி சுமார் 80 கி . மீ தூரத்தில் திபெத் எல்லை உள்ளது . அதனை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது , என தான் எடுத்த அழகிய புகைப்படங்களை இணைத்துப் பதிவேற்றியிருந்தார் .

இந்த பதிவை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே தீபா சர்மா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார் . இந்த தகவலை அறிந்து அவரது குடும்ப உறுப்பினர்களும் , நண்பர்களும் வேதனையடைந்துள்ளனர் . மேலும் மருத்துவர் தீபா சர்மாவின் அந்த புகைப்படம்  பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here