கடலில் கொட்டிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

அக்கறையோடு அகற்றும் சிறுமி!

பிரேசில்:

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் சிறுமி…பிரேசிலில் தன் தந்தையின் உதவியுடன் 4-வயது சிறுமி கடலில் கொட்டிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி வருகிறார்.

4 வயது சிறுமி Nina Gomes தன் தந்தையுடன் சேர்ந்து கடற்பகுதியில் கொட்டிக் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் , கழிவுகளை அப்புறப்படுத்தி வருகிறார்.

தன் தந்தை எடுத்த கடற்சார் உயிரினங்கள் குறித்த திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட சிறுமி நினா கோம்ஸ் பிளாஸ்டிக் கழிவுகளால் மீன்,  ஆமைகள் உயிரிழப்பதை தவிர்க்க முயன்று வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 1 கோடியே 10 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுவதாகவும், அதனால் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாகவும் ஐ.நா.வுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here