விடாது டெல்டா–அதிர்ச்சி தரும் தகவல்!!
கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து விட்டதாக உலக நாடுகள் எண்ணிவிடக்கூடாது. உருமாற்றம் அடைந்து வேகமாக பரவ தொடங்கி, தடுப்பூசி போட்டவர்களையும் விட்டு வைக்கவில்லை என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலக நாடுகளில் டெல்டா வைரஸ் அச்சுறுத்தி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவைப் பொருத்தவரை மே முதல் ஜூன் காலகட்டத்தில் 0.78 இருந்த பரவல் வேகம் ஜூன் 20 ஆம் தேதிக்கு பிறகு ஜூலை 7ஆம் தேதி வரை 0.88 சதவீதமாக அதிகரித்தது. 100 பேரில் 88 பேருக்கு தொற்று இருந்தது.
அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி,தடுப்பூசி போடுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாயிலாக பரவல் வேகத்தை நம்மால் கட்டுப்படுத்த வேண்டும்.
அதேசமயம் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்து வந்தாலும் அதன் வேகம் 15 நாட்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கும். இதனால் மாநிலங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








