அனாதை இல்லத்தில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 42 வயது ஆடவர் ஜோகூர் போலீசாரால் கைது

ஜோகூர் பாரு, ஜூலை 28:

ஜோகூர் நகரப் பகுதிக்கு அருகிலுள்ள அனாதை இல்லத்தில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 42 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குறித்த அனாதை இல்லத்தில் உதவியாளராக பணிபுரியும் சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) இரவு 9 மணியளவில் தாமான் ஸ்ரீ தெப்ராவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய ஜோகூர் பாரு தெற்கு OCPD துணை ஆணையர் முகமட் பாட்ஸ்லி முகமட் ஜைன், சனிக்கிழமை (ஜூலை 24) பிற்பகல் 3.17 மணிக்கு இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

“அனாதை இல்லத்தில் வசிக்கும் ஊழியர் ஒருவர் அங்குள்ள சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசிற்கு தகவல் கிடைத்தது என்று கூறினார்.

“தகவலை தொடர்ந்து, இந்த விசாரணைக்கு உதவும் பொருட்டு போலீசார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்,” என்று அவர் புதன்கிழமை (ஜூலை 28) கூறினார்.

ஆயினும், வழக்கு இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதால், ACP பட்ஸ்லி இந்த விவகாரம் குறித்து மேலும் தகவல் சொல்லுவதற்கு மறுத்துவிட்டார்.

மேலும் சந்தேகநபர் ஆகஸ்டு 1 தேதி வரை ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் உள்ளதாகவும், பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 ன் கீழ் இக் குற்றம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here