டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தினார் சிந்து
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 13- ஆம் நிலை வீராங்கனையை எந்தவித கடினமின்றி 2-0 என வீழ்த்தி இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இதில் பி.வி. சிந்து 21-15, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதியில் கொரியாவின் 12- ஆம் நிலை வீராங்கனை அல்லது ஜப்பானின் 4- ஆம் நிலை வீராங்கனையை எதிர்கொள்ள இருக்கிறார்.