பாகிஸ்தான் இரயில்வே துறை தீவிரம்
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஒவ்வொரு நாடுகளும் அறிவுறுத்தி வரும் நிலையில் பாகிஸ்தானிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பூசி போடாமல் தவிர்த்து வரும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என பாகிஸ்தான் நாட்டு ரயில்வே துறை அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் தவிர்த்து வரக்கூடிய இரயில்வே பணியாளர்களுக்கு அந்நாட்டு ரயில்வே துறை கடுமையான எச்சரிக்கையாக இதைக் கருதுகிறது.
அதன்படி வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத ரயில்வே துறை பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி போட விரும்புவர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.