மெர்சிங், ஜூலை 31:
ஜோகூரின் கம்போங் தஞ்சோங்கில் உள்ள ஜாலான் புலாங் பேருந்து நிலையத்தில் கைவிடப்பட்ட எட்டு கடைகள் இன்று (ஜூலை 31) அதிகாலை தீயில் எரிந்து நாசமானது.
அதிகாலை 3.55 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்ற பின்னர் 14 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக எண்டாவ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைவர் முகமட் அலியாஸ் ஹுசின் கூறினார்.
“தீவிபத்து கைவிடப்பட்ட காலி கடைகளின் 80% எரிந்து விட்டன என்றும் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் 90% எரிந்து விட்டது என்றும் அவர் ஓர் அறிக்கையின் மூலம் கூறினார்.
“தீவிபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றும் அவர் கூறினார். மேலும் அதிகாலை 5 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.