இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த முறையான திட்டவரைவும், கட்டமைப்பும், துறைசார் கல்வியும் முக்கியத் தூண்கள் – கோபிந் சிங் டியோ

இலக்கவியல் தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கை என்பது நவீன இலக்கவியல் உலகுக்கான முக்கிய கூறு என இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ கூறினார். 46ஆவது ஆசியான் மாநாட்டை மலேசியா ஏற்று நடத்தும் நிலையில், இலக்கவியல் அமைச்சின் கீழ் ASEAN 5G மற்றும் செயல்முறை தொழில்நுட்பம் (5GOT) பாதுகாப்பு மாநாடு 2025, 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. ஆசியாவிலேயே முதல் முறையாக நடைபெறும் இந்த செயல்முறை தொழில்நுட்ப மாநாட்டை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கை என்பது,நவீன இலக்கவியல் உலகத்தின் அடிப்படை கூறு ஆகும்.மலேசிய அரசாங்கம், பொருளாதாரம் மற்றும் சமூகத்தை இலக்கவியல் தொழில்நுட்பம் நோக்கி நகர்த்தும் நிலையில்,இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை மேலோங்கச் செய்வது அவசியம். புதிய தொழில்நுட்பம் மீது மக்கள் நம்பிக்கை கொள்வது அவசியம். அதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுப்பது தமது கடமை என அமைச்சர் வலியுறுத்தினார். இதற்கு முக்கியத் தூண்களாக விளங்கும்இலக்கவியல் உள்கட்டமைப்பு, திட்ட வரைவு மற்றும் இலக்கவியல் சார்ந்த விழிப்புணர்வு கல்வி ஆகியவற்றுக்கு விரிவான அணுகுமுறை தேவை என்று அவர் கூறினார்.  

ஆசியான் வட்டார டிஜிட்டல் சேவைகளில், இலக்கவியல்மீதான நம்பிக்கையை மேலோங்கச் செய்யும் அணுகுமுறைகளை வரையறுப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ASEAN இல் 5G மற்றும் செயல்முறைதொழில்நுட்ப பாதுகாப்புக்கான, பகிரப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை நிறுவதமதமைச்சு நுண்ணோக்குவதாக அமைச்சர் கோபிந்த் தெரிவித்தார்.

மேலும், “இலக்கவியலில் புதுமை மற்றும் மேம்பாட்டுத் திறனை வளர்க்கும் பொது-தனியார் கூட்டமைவுகளின் வழி ஆசியான் நாடுகளுக்கிடையே பாதுகாப்பான இணைய சூழலை உருவாக்கவும், பங்குதாரர்களிடையே அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தாம் முனைப்பு கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இணைய பாதுகாப்பு என்பது இன்றைய நிலையில் முக்கியமான ஒன்று. இலக்கவியல் அமைச்சின் கீழ்இயங்கும் CyberSecurity Malaysia நிறுவனத்தின்ஆய்வின்படி 2024 இல் 6,000 க்கும் மேற்பட்ட இணைய மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் முக்கியமாக மோசடி, ஊடுருவல்கள் மற்றும் தீங்கிழைக்கும் குறியீடுகள் அடங்கும். கடந்த ஆண்டில் இணைய குற்றங்களால் மலேசியா RM1.22 பில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை சந்தித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தாம் இது போன்ற முனைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார். இது போதாது, ஒட்டு மொத்த மலேசியர்களுக்கும்,ஆசியான் வட்டார நாடுகள் உட்பட  இது தொடர்பான விழிப்புணர்வு இருப்பது அவசியம்.

ஆசியான் 5G & Operational Technology (5GOT) Security Summit 2025 எனப்படும் 5ஜி கற்றலை மற்றும் செயல்முறை தொழில்நுட்ப பாதுகாப்பு மாநாடு காலத்திற்கேற்ப புதுமையான தீர்வுகளையும், அர்த்தம் பொதிந்த ஒத்துழைப்புகளையும் ஏற்படுத்தித் தருவதோடு, ஆசியான் வட்டார நாடுகளுக்கிடையே வலுவான நிலைத்தன்மைக்கான ஊக்கியாக அமையும்.

திறன்பேசி பாதுகாப்பு (Cybersecurity) என்பது இன்று “மிக மிக முக்கியமான விவகாரமாக” இருப்பதை அமைச்சர் கோடிகாட்டினார் .ஆனால், மலேசியா மட்டும் இது போன்ற சவால்களை எதிர்நோக்கவில்லை.ஒட்டுமொத்த உலகமும் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது, இதன் விளைவாகஆண்டுதோறும் திரில்லியன் கணக்கான டாலர்கள் வரைஇழப்பு ஏற்படுகிறது. இதனை எதிர்கொள்ள மலேசிய இலக்கவியல் அமைச்சுதகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மலேசியா இணைய பாதுகாப்பை வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆகஸ்ட் 26, 2024 அன்று நடைமுறைக்கு வந்த இணைய பாதுகாப்பு சட்டம் 2024, தேசிய சைபர் பாதுகாப்பு ஏஜென்சிக்கு (NACSA)மேற்பார்வையிடவும், துறைகளை ஒருங்கிணைக்கவும், தேசிய தகவல் உள்கட்டமைப்புகளை (NCIIs) பாதுகாக்கவும்  வழியமைக்கிறது.

வரும் அக்டோபரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய இணைய குற்ற மசோதா, காலாவதியான சட்டங்களை மாற்றி, நவீன சைபர் அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்த்துப் போராட அதிகாரிகளுக்கு தேவையான கருவிகளையும் திறன்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல், இணைய பாதுகாப்பை வலுப்படுத்த உலகலாவிய ரீதியில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மலேசிய ஏப்ரல் 9, 2025 அன்று, சைபர் கிரைம் மாநாட்டில் இணைய ஒப்புதல் அளித்தது. வரும் அக்டோபரில் ஹனோயில் ஐக்கிய நாடுகளின் சைபர் கிரைம் மாநாட்டிலும் கையெழுத்திட நாடு தயாராகி வருகிறதுஎன்பதையும் அமைச்சர் இன்று திவு செய்தார். துபோன்றநடவடிக்கைகள் இணைய குற்றங்களை எதிர்கொள்வதில் சர்வதேச விதிமுறைகள் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கான மலேசியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.

14 நாட்டு இலக்கவியல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்குகொள்ளும் இந்த ஆசியான் 5GOT பாதுகாப்பு மாநாட்டை, இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் 2025 Digital Nasional Berhad மற்றும் CyberSecurity Malaysia நிறுவனங்கள் பிர ஆசியான் வட்டார நாடுகளோடு இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here