விமானங்களின் டயர்களில் ஏன் நைட்ரஜன் வாயுவை நிரப்பறாங்க தெரியுமா?

விமானங்களின் டயர்களில் ஏன் நைட்ரஜன் வாயுவை நிரப்புகின்றனர்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் டயர்களில் சாதாரண காற்றை நிரப்புவது நல்லதா? அல்லது நைட்ரஜன் வாயுவை நிரப்புவது நல்லதா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. நிச்சயமாக நைட்ரஜன் வாயுவை நிரப்புவதுதான் நல்லது என்பதே இந்த சந்தேகத்திற்கான பதில். நைட்ரஜன் வாயுவை நிரப்புவதன் மூலம் பாதுகாப்பு உள்பட பல்வேறு விதங்களில் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

சரி, விமானங்களின் டயர்களில் என்ன வாயு நிரப்பப்படுகிறது? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். பொதுவாக விமானங்களின் டயர்களில் நைட்ரஜன் வாயுதான் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணங்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

பொதுவாக விமான பயணத்தில் இருப்பதிலேயே மிகவும் அபாயகரமான கட்டம் என்றால், அது டேக் ஆஃப் மற்றும் லேண்டிங்தான். விமானங்கள் டேக் ஆஃப் ஆகும்போதும், லேண்டிங் செய்யப்படும்போதும் விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே டேக் ஆஃப் மற்றும் லேண்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் டயர்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்தும் வழங்கப்படுகிறது.

விமானங்கள் லேண்டிங் ஆகும்போது, ரன்வே மற்றும் பிரேக்குகளின் கடுமையான உராய்வு, டயர்களில் மிக அதிக வெப்ப நிலையை உருவாக்குகிறது. விமானங்கள் டேக் ஆஃப் ஆகும்போதும் கூட இதே நிலைதான். ஏனெனில் டேக் ஆஃப் ஆகும்போது, எரிபொருள் அதிகமாக இருக்கும் என்பதால், விமானத்தின் எடையும் மிகவும் அதிகமாக இருக்கும். அத்துடன் விமானம் ரன்வே-யில் வேகமாக செல்லும்.

இதன் காரணமாக விமான டயர்களில் மிக அதிக வெப்ப நிலை உருவாகும். இந்த அதிகபட்ச வெப்ப நிலை காரணமாக விமானங்களின் டயர்களில் தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நைட்ரஜன் வாயுவை நிரப்பினால், விமானங்களின் டயர்களில் தீப்பற்றுவது தடுக்கப்படும். எனினும் நைட்ரஜன் வாயுவை நிரப்புவதற்கு இன்னும் பல்வேறு காரணங்கள் உள்ளன.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here