தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்றுகூடும் தடுப்பூசி மையத்தில் கோவிட்-19 ஏற்பட்டாலும் தொடர்ந்து செயல்படுகிறது; நாடாளுமன்றம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

கோலாலம்பூர், ஆகஸ்டு 1:

தற்போது நாட்டில் அதிகமானோர் கூடுமிடமாக கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் மையங்கள் செயல்படுகின்றன. ஆனால் அங்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டால் ஒரு நாளைக்கு அல்லது இரு நாள் மூடிவிட்டு மீளவும் அவை தொடர்ந்தும் இயங்குகின்றன. ஆனால் அதே காரணத்துக்காக நாடாளுமன்றம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் கேள்வி எழுப்பினார்.

மேலும் தற்போது அரசங்கம் கூறும் காரணங்கள் எதுவுமே ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவோ நம்பக்கூடியதாகவோ இல்லை என்றும் மக்கள் அரசாங்கத்தின் மேல் உள்ள நம்பிக்கையை முற்றாக இழந்துவிட்டன என்றும் தெரிவித்தார்.

தடுப்பூசி மையங்களில் தொற்று ஏற்பட்டதும் அது ஓர் இரு நாட்களுக்கு மூடியவுடன் பின்னர் செயல்படுகின்றது. இதை சுட்டிக்காட்டிய நஜீப் நாள்தோறும் தடுப்பூசி மையங்களுக்கு செல்லும் மக்களின் உயிர்களுக்கு இல்லாத மதிப்பும் பாதுகாப்பும் ஏன் 220 நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு மட்டும் ஏன் அவ்வளவு பாதுகாப்பு? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here