ரோபோக்களால் தயாரிக்கப்பட்ட தகடுகள்..!!

உலகின் அழகான அருங்காட்சியகம்..  .

நேஷனல் ஜாக்ரஃபிக் எனப்படும் தேசிய பூகோளவியல் நிறுவனம் துபாயின் எதிர்கால அருங்காட்சியகத்தை உலகின் 14 அழகான அருங்காட்சியகத்தில் ஒன்றாக தேர்வு செய்துள்ளது.

துபாய் நகரின் ஷேக் ஜாயித் சாலையில் கட்டிடக் கலைக்காக சர்வதேச விருது பெற்ற எதிர்கால அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும் அதன் கட்டிட கலையையும் கொண்டதாக திகழ்கிறது.

இந்நிலையில் நேஷனல் ஜாக்ரஃபிக் எனப்படும் தேசிய பூகோளவியல் நிறுவனம், உலகின் 14 அழகான அருங்காட்சியகத்தில் ஒன்றாக, துபாயிலுள்ள கட்டடக்கலையின் அதிசயமாக திகழ்ந்து வரும் இந்த எதிர்கால அருங்காட்சியகத்தை தேர்வு செய்துள்ளது.

இதுகுறித்து அமீரக அமைச்சரவையின் விவகாரத்துறை மந்திரி கூறியதாவது, இந்த துபாயின் எதிர்கால அருங்காட்சியகம் அமீரகம் , உலகின் நுழைவாயிலாக திகழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்த அருங்காட்சியகத்தின் முகப்பில் சுமார் 1,024 தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தகடுகளை ரோபோக்கள் தயாரித்திருக்கின்றன் என்பது மேலும் சிறப்பு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here