UOB வங்கியின் முன்னாள் தலைவர் வீ சோ யாவ் காலமானார்

மிகப் பெரும் செல்வந்தரும் UOB வங்கியின் முன்னாள் தலைவருமான டாக்டர் வீ சோ யாவ் காலமானார். அவருக்கு வயது 95.

வங்கியின் கௌரவ ஆலோசகருமான டாக்டர் வீயின் மறைவு குறித்து பிப்ரவரி 3ஆம் தேதி வங்கி அறிவித்தது.

“டாக்டர் வீ தொலைநோக்கு கொண்டவர். மிகச் சிறந்த வங்கியாளர். சமூகத் தூணாக விளங்கியவர். கொண்டாடப்பட்ட முன்னோடி,” என்று வங்கி அவரைப் பற்றிப் புகழ்ந்துரைத்துள்ளது.

பிப்ரவரி 2ஆம் தேதி நிலவரப்படி, டாக்டர் வீயின் நிகர சொத்து மதிப்பு $7.2 பில்லியன் என்று ஃபோர்ப்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

UOB குழுமத்தின் இயக்குநராக 60 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றிய அவர், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் ஓய்வுபெற்றார்.

டாக்டர் வீயின் தலைமைத்துவத்தின்கீழ், வங்கியின் சொத்து மதிப்பு $2.8 பில்லியனிலிருந்து $253 பில்லியனுக்குமேல் உயர்ந்தது. 75ஆக இருந்த வங்கியின் கிளைகள் உலக அளவில் 500க்கு மேல் விரிவடைந்தன.

UOB வங்கியின் தலைவராகவும் தலைமை நிர்வாகியாகவும் 1974 முதல் 2007ஆம் ஆண்டு வரை பணியாற்றிய அவர், 2022ன் ஆண்டறிக்கைப்படி, வங்கியில் 18 விழுக்காட்டுக்குமேலான பங்குகளுக்கு உரிமையாளராக இருந்தார்.

சிங்கப்பூரின் 50 பெருஞ்செல்வந்தர்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் அவர் 89ஆம் இடத்தை வகித்தார். உலக அளவிலான அப்பட்டியலில் அவர் 325வது இடத்தில் இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here