வம்பிழுத்த வாலிபர்களை தெறித்து ஓடவிட்ட காட்டு யானை
அஸ்ஸாம்:
வம்பிழுத்த வாலிபர்களை தெறிக்க விட்ட யானை…சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் அமைதியாக கடந்து சென்ற யானைக் கூட்டத்திடம் வம்பிழுத்த வாலிபர்களை ஒற்றை யானை ஒன்று தெறிக்க விட்டு ஒருவரை மிதித்து வீசிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது
அஸ்ஸாம் மாநிலம் நிமாலிகார்க் காட்டுப்பகுதியில் உள்ள சாலையை ஒருபுறத்தில் இருந்து மறுபுறம் உள்ள காட்டுக்குள் 10க்கும் மேற்பட்ட யானைகளைக் கொண்ட யானை கூட்டம் ஒன்று அமைதியாக கடந்து சென்றது. இருபுறமும் நூற்றுக்கணக்கில் திரண்டு நின்ற கிராமத்து இளைஞர்கள் அந்த யானைக்கூட்டத்தை சத்தமிட்டு விரட்டினர்.
சாலையில் நின்ற வாகன ஓட்டிகளை ஒலி எழுப்பச்செய்து வம்பிழுத்தனர். யானைகள் அனைத்தும் பயந்தபடியே அந்த சாலையை கடந்து சென்றது. கடைசியாக வந்த யானை ஒன்று வம்பிழுத்த கூட்டத்தை விரட்டி, விரட்டி தெறிக்க விட்டது.
பதறித்துடித்து பின்னங்கால் பிடரியிலடிக்க சிதறி ஓடிய கூட்டத்தில் பாய்ந்து சென்று பள்ளத்தில் விழுந்த இளைஞரை அதே வேகத்தில் காலால் மிதித்து விட்டு அங்கிருந்து சிங்கிளாக திரும்பி காட்டுக்குள் சென்றது அந்த ஒற்றையானை.
சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழிக்கு நிகழ்கால சாட்சியாக மாறியுள்ள இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.