ராணுவம் உறுதியளித்திருக்கிறது!
ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை ராணுவம் கொடூரமாக அடக்கிவருகிறது. இதில், 900க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் போராட்டம் நீடிக்கிறது.
இரு ஒருபுறமிருக்க கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. பொருளாதாரம் 18 சதவீதம் வரை சரியும் என உலக வங்கி கணித்துள்ளது.
இந்நிலையில், ராணுவ ஆட்சியின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படுவதாகவும், ஆகஸ்ட் 2023 க்குள் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவசர நிலை நீக்கப்படும் எனவும் ராணுவம் உறுதியளித்துள்ளது.