ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போன நசுங்கிய வெள்ளி ஸ்பூன்..!!

இங்கிலாந்து கரண்டிக்கு

இம்மாம் கிராக்கியா!

சமீபத்தில் லண்டன் தெருக்களில் கார் பூட் விற்பனை செய்த ஒருவர் வெறும் 90 பைசாவுக்கு ஒரு பழைய நசுங்கிய, மெல்லிய, நீண்ட கைப்பிடி கொண்ட கரண்டியை வாங்கி, பின்னர் அதனை ஆன்லைன் ஏலத்தின் போது 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

பெயர் தெரியாத அந்த மனிதன், சோமர்செட்டின் க்ரூகெர்னிலுள்ள லாரன்ஸ் ஏலதாரர்களை அணுகி, கரண்டியை ஏலத்தில் பதிவு செய்து, லாரன்ஸ் ஏலதாரர்களிடமிருந்து உறுதிப்படுத்தலுக்காகக் காத்திருந்தான்.

இதற்கிடையில், லாரன்ஸ் ஏலதாரர்களின் வெள்ளி நிபுணர் அலெக்ஸ் புட்சர் இந்த 5 அங்குல கரண்டியை பரிசோதித்து, அது 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த ஒரு வெள்ளி ஸ்பூன் என்பதைக் கண்டறிந்து, இந்த ஸ்பூனுக்கு தொன்மைக்குரிய மதிப்பீட்டின் மூலம் ரூ .51,712 மதிப்பீட்டை நிர்ணயித்தார்.

இதற்குப் பிறகு ஆன்லைன் ஏலத்தில், படிப்படியாக அதன் ஏலத்தொகை படிப்படியாக அதிகரித்தது. இறுதியாக இந்த ஸ்பூன் ரூ .1,97,000 க்கு விற்கப்பட்டது. மேலும், வரிகள்,  கூடுதல் கட்டணங்கள் உட்பட பழங்கால கரண்டியின் மதிப்பு ரூ .2 லட்சத்தை தாண்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here