தடுப்பூசி கொள்முதல் தொடர்பான கூட்டத்திற்கு சென்ற என்னை கைது செய்யப்போவதாக போலீசார் மிரட்டினார்கள்; PAC தலைவர் போலீஸின் செயலை கடுமையாக சாடினார்.

பெட்டாலிங் ஜெயா:

பொது கணக்குக் குழு (PAC) தலைவர் வாங் கா வோ இன்று காலை நாடாளுமன்றத்தில் நுழைய முயன்றபோது, தன்னை கைது செய்யப்போவதாக மிரட்டியதற்காக அவர் காவல்துறையை கடுமையாக சாடினார்.

அவர் தான் PAC தலைவர் என்று கடமையில் இருந்த அதிகாரியிடம் சொன்னதாகவும், தடுப்பூசி கொள்முதல் தொடர்பாக காலை 10.30 மணி அளவில் சுகாதார அமைச்சகத்துடன் நடக்க இருக்கும் சந்திப்பில் கலந்து கொள்வது பற்றி தெரிவித்த போதும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை என்றும் வாங் கூறினார்.

இருப்பினும், போலீஸ் விசாரணையில் நாடாளுமன்ற செயலாளரால் கையொப்பமிடப்பட்ட ஒரு கடிதத்தை அவர் காட்டிய போதிலும் அவருக்கு ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.

“நான் இரண்டு நிமிடங்களில் வெளியேறாவிட்டால் என்னை கைது செய்வதாக காவல்துறை மிரட்டியது” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

நாடாளுமன்ற ஊழியர்கள் தலையிட்ட பிறகே PAC உறுப்பினர்கள் பின்னர் அனுமதிக்கப்பட்டனர் என்று வோங் கூறினார்.

“இத்தகைய நடவடிக்கை (காவல்துறையினரால்) வரவேற்க தகுந்தது இல்லை மேலும் இது PAC உறுப்பினர்களாக எங்கள் பதவிக்கு அச்சுறுத்தலாகும்,” என்று அவர் கூறினார்.

இன்று காலை, நாடாளுமன்ற மாளிகைக்கு செல்லும் சாலைகளை காவல்துறையினர் தடுத்தனர். அங்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்றைய சிறப்பு அமர்வை ஒத்திவைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். ஆனால் பின்னர் டத்தாரான் மெர்டேக்காவில் கூடினர்.

லெபுராயா சுல்தான் இஸ்கந்தர் சாலையின் வெளியேறும் வழிகளில் போலீசார் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களை திருப்பி திருப்பி அனுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பெயர்குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி இதைப்பற்றி கூறியபோது, “போலீசார் அங்கிருந்த அனைவரையும் போலீசார் தடுத்தனர்” என்று கூறினார், ஒரு எம்பி கூட போலீஸ் டேப்பை கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

இன்று நடைபெறவிருந்த நாடாளுமன்ற சிறப்பு அமர்வு வியாழக்கிழமை கோவிட் -19 வழக்குகள் கண்டறியப்பட்ட பின்னர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று காலை ஒன்றுகூடியது குறிப்பிடத்தக்கது.

நேற்று, கோவிட் -19 நோய்த்தொற்றின் அதிக ஆபத்து காரணமாக அனைத்து நாடாளுமன்ற கூட்டங்களையும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதற்கு சுகாதார பொது இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா பரிந்துரைத்த போதிலும் சிறப்பு தேர்வுக் குழு கூட்டங்கள் தொடரும் என்று வாங் கூறினார்.

மேலும் இன்றைய கூட்டத்தில் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபாவும் கலந்து கொண்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here