கோவிட்-19 வீட்டு தனிமைப்படுத்தலின் அடையாள வளையலை அனுமதியின்றி அகற்றிய பெண்ணுக்கு 5,000 வெள்ளி அபராதம்

ஈப்போ: கமுண்டிங்கில் உள்ள பதின்மவயதான பெண் ஒருவருக்கு கோவிட் -19 வீட்டு தனிமைப்படுத்தலின் அடையாளமாக மணிக்கட்டில் அணிந்திருந்த வளையலை அனுமதியின்றி நீக்கியதற்காக 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

17 வயதான அந்த பெண் தனது கையில் இருந்த கோவிட்-19 தனிமைப்படுத்தலின் அடையாளமான வளையலை அகற்றியதை டிக்டோக்கில் (TikTok) பதிவேற்றம் செய்து வைரலாகிவிட்டதாக தைப்பிங் மாவட்ட துணை கமிஷனர் ஒஸ்மான் மமத் கூறினார்.

“திங்களன்று (ஆகஸ்ட் 2) சுகாதார அமைச்சின் அனுமதியின்றி அந்த பெண் சிவப்பு நிற வளையலை அகற்றிய 31 வினாடி வீடியோவை நாங்கள் கண்டோம்”.

“அப்பெண் வெளியே செல்ல விரும்பியதால் அவர் தனது கோவிட்-19 தனிமைப்படுத்தல் வளையலை வெட்டிவிட்டார்,” என்று அவர் கூறினார்.அந்த பெண் ஜூலை 31 அன்று கோவிட் சோதனை (swab test) எடுத்துள்ளார் மற்றும் அவரது முடிவுகளுக்காக காத்திருக்கும்போது அவர் வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவின் கீழ் இருந்தார்.

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) அவர் வெளியிட்ட அறிக்கையில், “நண்பரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த அப்பெண்ணை, நாங்கள் அவரது இருப்பிடத்தைக் கண்காணித்து அங்கு சென்று அபராதத்தின் அறிவிப்பை வழங்கினோம்.

ஏசிபி ஒஸ்மான் கூறுகையில், அபராதத்தின் அளவு அவர்களின் குற்றத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படுகின்றது என்றார்.

“கண்காணிப்பு மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற சுகாதார இயக்குநர் ஜெனரலின் அறிவுறுத்தலை அந்த பெண் மதிக்கவில்லை.

“கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான நிலையான இயக்க நடைமுறைகளை கடைபிடிக்குமாறு (SOP) நாங்கள் மக்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

“எந்தவொரு நபரும் வேண்டுமென்றே சட்டத்தை மீறுவதாகக் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here