கிள்ளான்: படகில் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 19 வெளிநாட்டவர்கள், காப்பாரில் உள்ள சுங்கை செர்டாங் பெசாரிலிருந்து 2.5 கடல் மைல் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சிலாங்கூர் மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (MMEA) இயக்குநர் கேப்டன் முகமட் ரோஸ்லி காசிம் இச்சம்பவம் பற்றி கூறுகையில், திங்கட்கிழமை (ஆகஸ்டு 2) அதிகாலை 1 மணியளவில் தாம் குறித்த படகைக் கடலில் கண்டதாகவும், அது மலேசியா-இந்தோனேசியாவின் கடல் எல்லையை நோக்கிச் சென்றதாகவும் கூறினார்.
படகின் கேப்டன் தப்பிக்கும் முயற்சியில் கடற்படையின் ரோந்துப் படகைத் தாக்க முயன்றார்.
“இருப்பினும், குறித்த வெளிநாட்டவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியது மற்றும் அனைத்து பயணிகளும் கடலில் மூழ்கினர்” என்று அவர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) தொடர்பு கொண்டபோது கூறினார்.
கடலுல் மூழ்கிய அனைத்து வெளிநாட்டினரும் மீட்கப்பட்டனர், அதே நேரத்தில் MMEA இன் ரோந்து படகுக்கு சில சேதங்கள் ஏற்பட்டது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
“படகின் கேப்டன் உட்பட 19 வெளிநாட்டு பயணிகளுடன் குறித்த படகு சென்றதாகவும் அவர் கூறினார்.
“நாங்கள் மூழ்கிய படகில் இருந்ததாக நம்பப்படும் 18 இந்தோனேசியர்களையும் ஒரு பாகிஸ்தான் நாட்டவரையும் கைது செய்துள்ளோம், கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள்” என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் 12 வெளிநாட்டவர்கள் செல்லுபடியாகும் பயண ஆவணத்தை சமர்ப்பிக்க தவறினர் என்றும் மற்றய 7 பேருக்கு பாஸ்போர்ட் இருந்தது என்றும் முகமட் ரோஸ்லி கூறினார்.
இவ்வழக்கு சம்மந்தமாக தாம் மேலதிக விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.









