வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா தீநுண்மி வெளியானது:

 அமெரிக்க எம்.பி.க்கள் அறிக்கை

சீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்துதான் கரோனா தீநுண்மி கசிந்ததாக அமெரிக்க குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு ஏற்கெனவே எழுந்த நிலையில் அதை சீனா மறுத்து வந்தது. இதையடுத்து, கரோனா தீநுண்மியின் தோற்றம் குறித்து ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அமெரிக்க அதிபா் பைடன் அந்நாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இந்நிலையில், குடியரசுக் கட்சி எம்.பி. மைக் மெக்கால் தலைமையிலான அக்கட்சி எம்.பி.க்கள் ஓா் ஆய்வறிக்கையை திங்கள்கிழமை வெளியிட்டனா்.

அதில், வூஹான் ஆய்வகத்திலிருந்து கரோனா தீநுண்மி கசிந்ததற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. 2019, செப்டம்பா் 12-ஆம் தேதிக்கு முன்னரே இது நிகழ்ந்திருக்க வேண்டும்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here