வீடு கட்டுவதற்கு “சிமெண்ட்” இலவசம் ! – யாருக்கு?

 ஸ்ரீ சிமெண்ட்ஸ் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு.!

டோக்கியோ விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக வீடு கட்டுவதற்கு சிமெண்ட் இலவசமாக வழங்குவதாக ஸ்ரீ சிமெண்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக பலர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஸ்ரீ சிமெண்ட்ஸ் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒலிம்பிக் 2021 இந்தியா சார்பாக வெற்றியாளர்களுக்கு அவர்களின் கனவு இல்லங்களை கட்ட இலவசமாக சிமெண்ட் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் வெற்றியாளர்களைக் கொண்டாடும் வகையில், வெற்றியாளர்களுக்கு அவர்களின் கனவு இல்லங்களை உருவாக்க உதவும் வகையில் இந்த இலவச சிமெண்ட் அறிவிப்பை வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இதுவரை மூன்றாக உள்ளது. பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஏற்கெனவே ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்று வென்றுள்ளார். குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் குறைந்தபட்சம் வெண்கலம் வெல்வது உறுதி.

மேலும் பிவி சிந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இரண்டாவது இந்தியர், நாட்டின் முதல் பெண்மணி ஆவார். 2016 ரியோ ஒலிம்பிக்கில், இந்தியா இரண்டு பதக்கங்களை மட்டுமே பெற்றது. இந்தியாவின் விளையாட்டு வீரர்கள் விளையாட்டுத் திறனில் மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிட்டு எங்களை பெருமைப்படுத்துகிறார்கள்.

ஓர் இந்தியராகவும், விளையாட்டு ஆர்வலராகவும், அவர்கள் செய்கிற எல்லாவற்றிற்கும் ஏதாவது கொஞ்சம் திருப்பித் தருவது முக்கியம் என்று நான் உணர்கிறேன், “என்று ஸ்ரீ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் எச். எம். பெங்கூர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அவர்கள் நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள் எனவே அவர்களை கவர வைப்பதன் மூலம் நிறைய நபர்கள் விளையாட்டில் தங்களுடைய அர்ப்பணிப்பை செலுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அவர்.

ஸ்ரீ சிமெண்ட்ஸ் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் சிமெண்ட் உற்பத்தியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அவர்கள் ஆண்டுக்கு சுமார் 44.4 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறார்கள். இந்நிறுவனம் ஸ்ரீ ஜங் ரோதக் சிமெண்ட், பங்கூர் சிமெண்ட், ரூஃபான்,  ராக்ஸ்ட்ராங் சிமெண்ட் போன்ற பலவகையான தயாரிப்புகளின் போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here