சிலாங்கூர், புத்ராஜெயா, கோலாலம்பூர் பகுதிகளில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நீர் விநியோக சேவையில் அதிகளவில் கட்டணம் வருவது குறித்து கிடைக்கப்பெறும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை நாம் காண்கின்றோம்.
இதற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. நீண்ட நேரம் குளிப்பது, பல் துலக்கும்போது நீர்க்குழாயைத் திறந்துவைத்திருப்பது அல்லது கார் கழுவும்போது நாம் பயன்படுத்தும் நீரின் கொள்ளளவு மற்றும் செடிகளுக்கு பாய்ச்சப்படும் நீர் ஆகிய சேயல்பாடுகளின் காரணமாக மாதாந்திர நீர்ச்சேவைக் கட்டணம் அதிகரிக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்கிறோமா?
ஆனாலும் உள்குழாய் பழுதின் காரணமாக சில சமயங்களில் நீர் விநியோகக் கட்டணம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே மாதாந்திர நீர்க்கட்டணத் தொகை குறித்து எழும் குழப்பங்களுக்குத் தீர்வுகாணும் வகையில் தெளிவான விளக்கம் அவசியமாகிறது. வாடிக்கையாளர்கள் மாதாந்திர நீர்க்கட்டணத்தைப் பெறும்போது அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். ஆனால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் நிச்சயம் தீர்வு உண்டு.
மாதாந்திர நீர்க்கட்டணத்தைப் புரிந்துகொள்ளுதல்
நமது மாதாந்திர நீர்க்கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்து யோசனை சேய்ததுண்டா? அனைத்து வாடிக்கையாளர்களின் மாதாந்திர நீர்ச்சேவைக் கட்டணம், அவர்களின் தளங்களில் உள்ள நீர்க்குழாய் மீட்டரில் காண்பிக்கும் பயன்பாட்டு தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்தத் தரவுகளை மீட்டர் கண்காணிப்பாளர்கள் நேரடியாகக் குறித்துக்கொள்வர். இச்சமயத்தில் இந்த மீட்டரில் நீர்ப் பயன்பாடு தரவு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதையும் நாம் அறிந்துகொள்வது அவசியம். உங்கள் தளங்களில் பொருத்தப்படும் நீர்ச்சேவை மீட்டர் 40m3 அடிப்படையில் நீர்ப்பயன்பாட்டினைக் குறித்துக்கொள்ளும்.
அதிக அளவில்நீர்ப்பயன்பாட்டினை அறிதல்
வாடிக்கையாளர்களின் பங்களிப்பு
கடந்த 2000ஆம் ஆண்டுக்கு முன்னதாகக் கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த அதிகத் தொகையிலான நீர்ச்சேவைக் கட்டணம் பாதிப்பினை ஏற்படுத்தும். காரணம் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் அங்ல் குழாய்க் கட்டமைப்பு மாற்றப்பட்டிருக்காது. மேலும் அந்தக் குழாய்கள் பொருத்தப்பட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்ட நிலையில் அதன் உள்கட்டமைப்பில் நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கலாம். அந்தக் காலகட்டத்தில் தற்போதுள்ளதுபோல் நவீன மற்றும் வலுவான குழாய் சம்பந்தப்பட்ட பொருட்கள் இல்லாததும்கூட இந்தப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
சுவர்களுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் குழாய்கள், குளியல் அறை குழாய்கள் போன்ற நீர் விநியோகக் கட்டமைப்பில் நேரடி அல்லது நேரடி அற்ற நீர்க்கசிவின் காரணமாக ஒரு வீட்டில் ஓராண்டு காலகட்டத்திற்கு 20 ஆயிரம் கேலன் (75,708 லிட்டர்) நீர் வீணாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கழிப்பறையில் நீர்க்கசிவு இருந்தாலோ அல்லது நீர் தொடர்ந்து குழாயில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தாலோ அது நேரடியற்ற முறையில் பயன்பாட்டுக் கட்டணத்தை அதிகப்படுத்தும்.
உள்குழாய்க் கட்டமைப்பில் நீர்க்கசிவு ஏற்பட்டால் அது வாடிக்கையாளர்களின் பொறுப்பு என 2006 நீர்ச்சேவைத் துறை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, வீட்டில் நீர்க்கசிவு ஏதும் உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட நீர்க்குழாய் பழுதுபார்க்கும் தரப்பினரைப் பணிக்கு அமர்த்தி அந்த நீர்க்கசிவினைச் சரிபார்க்க வேண்டும். இதுமட்டுமன்றி வாடிக்கையாளர்கள் தங்கள் தளங்களில் உள்ள நீர்க்குழாய்களை வழக்கமாகச் சரிபார்க்க வேண்டும்.
நீர் விநியோகத் தரப்பினராக ஆயர் சிலாங்கூர் எதிர்நோக்கும் சவால்கள்
அனைத்து வாடிக்கையாளர்களின் மாதாந்திர நீர்ச்சேவைக் கட்டணம், அவர்களின் தளங்களில் உள்ள நீர்க்குழாய் மீட்டரில் காண்பிக்கும் பயன்பாட்டுத் தரவுகளின் அடிப்படையில் மீட்டர் கண்காணிப்பாளர்கள் மூலம் கணக்கிடப்படுகிறது. ஆனாலும் ஒருசில தளங்களுக்குள் மீட்டர் பொருத்தப்பட்டிருப்பது நேரடியாக அதனைக் காண முடியாத சுழ்நிலையில் உள்ளது. இந்தச் சுழ்நிலைகளை எதிர்கொள்ள ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மீட்டர் இடமாற்றுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டமானது மீட்டரிலுள்ள தரவுகளை எளிதாகக் குறித்துக்கொள்ள வழிவகுக்கின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு ஜூலை மாதம் வரையில் 3,657 மீட்டர்கள் (45.7 விழுக்காடு) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
2006 நீர்ச்சேவைத் துறை சட்டத்தின்படி வாடிக்கையாளர்களின் தளங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மீட்டர்கள் நீர்ச்சேவை நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்று கருதப்படுகிறது. இதன்வழி அந்த மீட்டரை இடமாற்றம் செய்வது உட்பட முக்கியச் ஙெ்யல்பாடுகளை முன்னெடுக்க அந்நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த மீட்டர்களில் காட்டப்படும் தகவல்கள் படிக்க முடியவில்லை என்றாலோ அல்லது அது தெளிவான இடத்தில் பொருத்தப்படாமல் இருந்தாலோ நீர்ச்சேவை நிறுவனம் அந்த மீட்டரை இடமாற்றம் செய்யவும் அல்லது புதிய மீட்டரைப் பொருத்தவும் முனையலாம்.
பழைய அல்லது பழுதடைந்த மீட்டர் காரணமாக தரவுகள் கணக்கெடுப்பில் தவறு ஏற்படலாம். எனவே அந்தப் பழுதடைந்த மீட்டர்களைச் சரிசெய்யவோ அல்லது மாற்றவோ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகின்றது. இதற்கான செலவுகளை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது. அதேசமயத்தில் புதிய மீட்டரை மாற்றிய பிறகும் அல்லது பழுதினைச் சரிசெய்த பிறகும் அதிகத் தொகையில் கட்டணம் பெறும் வாடிக்கையாளர்கள் உடனடியாக 15300 என்ற எண்களில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இந்தப் புகாரின் மூலம் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அந்த விவகாரத்தை விசாரிக்கும்.
நியாயமான மாதாந்திர நீர்ச்சேவைக் கட்டணத்தை நிலைநிறுத்துவதற்கு ஆலோங்னை
வாடிக்கையாளர் என்ற முறையில் மாதாந்திர நீர் விநியோகக் கட்டணத்தைக் கண்காணிப்பது அவசியமாகின்றது. கட்டுப்படுத்த முடியாத நீர்ப் பயன்பாட்டின் காரணமாக இந்தக் கட்டணத் தொகை அதிகரிக்கலாம்.தொற்றுப்பரவல் காரணத்தால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் தேசிய நீர்ச்சேவை ஆணையம் பரிந்துரைத்த நாளொன்றுக்கு 180 லிட்டர் நீர் பயன்படுத்துவதை விட நீரின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது.
தேசிய நீர்த்துறையின் சீரமைப்புத் தரப்பினர் என்ற முறையில் நமது தினசரி நடவடிக்கையில் நீர்ப்பயன்பாடு குறித்து ஸ்பான் சில குறிப்புகளை வழங்கியுள்ளது
- குளிப்பது: 5 நிமிட குளியலுக்கு ஏற்ப 30 லிட்டர் நீர் பயன்படுத்துதல். குளிக்கும்போது உடலுக்கு சவுக்காரம் அல்லது முடிக்கு ஷாம்பு போட்டுக்கொண்டிருக்கும்போது நீர் அடைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
- பல் துலக்குதல்: இதற்கு 0.5 லிட்டர் நீர் பயன்படுத்தலாம். பல் துலக்கும்போது, வாய்கொப்பளித்த பிறகு நீர் அடைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
- கழிப்பறையில் நீர் பம்ப்: 4.5 லிட்டர் நீரைப் பயன்படுத்தலாம். இரட்டை பிளஷ் மூலம் வாடிக்கையாளர் நீரை மிச்சப்படுத்தலாம். திடக்கழிவுக்கு ஒரு பிளஷும் திரவக் கழிவுக்கு ஒரு பிளஷும் பயன்படுத்தலாம்.
- பாத்திரங்கள் கழுவுதல்: 25 லிட்டர் வரை நீரைப் பயன்படுத்தலாம்.
- துணிவைத்தல்: 130 லிட்டர் நீர் வரை பயன்படுத்தலாம்.
நீர்ச்சேவைத் துறையின் நிலையான எதிர்காலத்தை நோக்கி
பல்வேறு சாவால்களை எதிர்கொள்கின்றபோதிலும் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தூய்மையான மற்றும் பாதுகாப்பான நீர்ச்சேவையை வழங்குவதில் அக்கறை கொள்கிறது. நீர்ச் சேவை நிறுவனம் என்ற முறையில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் அடிப்படையில் புதிய நீர்ச்சுத்திகரிப்பு மையத்தைத் திட்டமிடவும் அடையாளம் காணவும் முனைந்துள்ளது. ஆனாலும் இதுபோன்ற மேம்பாடுகளுக்கு அதிகத் தொகை தேவைப்படுகிறது. மேலும் சுற்றுச்சுழலுக்கு அது பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே வாடிக்கையாளர்கள் என்ற முறையில் அனைவரும் திட்டமிட்டு நீரினைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டணம் பெறும்போது ஏற்படும் அதிர்ச்சியினைத் தவிர்க்க முடியும். அதேசமயம் நமது நீர் வளங்களையும் பாதுகாக்க உதவிட முடியும்.
உங்கள் நீர்ச்சேவைக் கட்டணத்தை எவ்வாறு கணக்கிடுவது?

- நீர் பயன்பாட்டு குறிப்பைக் காண மீட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் மூடியை அகற்றுங்கள்.
- மீட்டரில் 8 எண்கள் 4 தசம புள்ளிகளில் காட்டப்படும். முதல் 4 எண்கள் கறுப்பு நிறத்திலும் அதன் பின்பக்கம் வெள்ளை நிறத்திலும் இருக்கும். தொடர்ந்து 4 எண்கள் வெள்ளை நிறத்திலும் அதன் பின்பக்கம் சிவப்பு நிறத்திலும் இருக்கும். இது நீர்ப் பயன்பாட்டினை கியுபிக் மீட்டர் அடிப்படையில் காட்டுகின்றது. அந்தக் கறுப்பு நிறத்திலான எண்கள் முந்தைய மாத கணக்கெடுப்புடன் கழித்திருக்க வேண்டும். இந்த வேறுபாடு இந்த மாதத்திற்கான மொத்த வெளிப்பாட்டினைக் காட்டும்.
- ஒருவேளை 40m3 என மீட்டர் குறிப்பு வேறுபாடு இருந்தால் காட்டப்படும் அந்த எண்ணிக்கை இம்மாதக் கணக்கில் சேர்க்கப்படும்.
30 நாட்கள் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் நீர்ச்சேவைக் கட்டணம் கணக்கெடுக்கப்படுகிறது. ஆனாலும் தேசிய நீர்ச்சேவை ஆணையத்தின் ஆலோசனைப்படி நீர் மீட்டர் கட்டண விகிதம், 2006 நீர்ச்சேவைத் துறையினால் உறுதிப்படுத்தப்படுகின்றது.
கட்டண கால அவகாசம்: 30 நாட்கள் / 30 நாட்கள் (ஒரு மாதம்): 1.00 மாதம்.
பயன்பாடு: 40m3









