குடிநீர் வேண்டுமா? எங்களுடன் பாலியல் உறவு கொள்ளுங்கள்

சிரியா, இராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா, தெற்கு சூடான் போன்ற போரால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய முயன்றுவருகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளைப் பொறுத்தவரை மக்கள் ஐரோப்பாவை நோக்கிச் செல்வதற்கு அங்கு நிலவும் வறுமை காரணமாக உள்ளது.

லிபியாவின் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள குடியேறிகள் அங்குள்ள பாதுகாப்புப் படை அதிகாரிகளால் கொடூரமான பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என அம்னெஸ்டி மனித உரிமை அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இதில் கொடூரத்தின் உச்சகட்டமாக சுத்தமான குடிநீர், உணவு, கழிவறை வசதியைப் பெற வேண்டுமென்றால் பாதுகாப்புப் படையினருடன் உறவுகொள்ள வேண்டும் என்ற துயரநிலையில் குடியேறிகள் இருப்பதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் குழந்தைகளும்கூட பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுவதாக குடியேறிகள் சிலரிடம் பேசியதன் மூலம் அம்னெஸ்டி கண்டறிந்துள்ளது.

மேலும் அம்னெஸ்டியிடம் பேசிய கர்ப்பிணிகள் சிலர் பாதுகாப்புப் படையினரால் தாங்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். லிபிய தடுப்பு முகாம்களிலுள்ள நைஜீரியா, சோமாலியா, சிரியாவைச் சேர்ந்த 14 – 50 வயதுக்கு உட்பட்ட பெண்களிடம் அம்னெஸ்டி பேசியிருக்கிறது. இந்தக் கொடூரங்களுக்கான சாட்சியங்களும் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here