7 மாத கர்ப்பிணியாக இருந்த பிரபல பாடகி சித்தி சாரா கோவிட் தொற்றினால் காலமானார்

பிரபல பாடகி சித்தி சாரா ரைசுதீன் கோவிட் -19 தொற்றினால் காலமானார். அவரது கணவரின் கூற்றுப்படி சித்தி சாரா இன்று அதிகாலை 5.13 மணியளவில் செராஸில் உள்ள துவாங்கு முஹ்ரிஸ்  மருத்துவமனையில் (HCTM) காலமானார்.

ஷூயிப் இன்ஸ்டாகிராம் பதிவில் செய்தி வெளியிட்டார். ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த சித்தி சாரா, கடந்த வாரம் மோசமான இருமல் மற்றும் குறைந்த இரத்த-ஆக்ஸிஜன் அளவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு குழந்தை பிறந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்.  சித்தி சாரா மற்றும் ஷுயிப் 2011 இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here