உணவில் கூடுதல் சுவை இருக்க வேண்டும் என்று எண்ணி, சமையலில் உப்புக்கு பதிலாக உரத்தைப் பயன்படுத்தி சாப்பிட்ட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த துயர சம்பவம் நையீரியாவில் இடம்பெற்றுள்ளது. நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உணவில் சுவை கூடுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக உப்புக்கு பதிலாக உர வகையை பயன்படுத்தி உணவை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
இதில் குடும்ப உறுப்பினர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பெண்கள் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.