தப்பி செல்லும் போது பரிதாபம்.. ஆப்கான் ராணுவ விமானம் உஸ்பெகிஸ்தானில் விழுந்து விபத்து

தஷ்கெந்த்: ஆப்கானிஸ்தான் ராணுவ விமானம் உஸ்பெகிஸ்தானில் விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. விமானிகள் இரண்டு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ஆப்கானிஸ்தானை மொத்தமாக தாலிபான்கள் கைப்பற்றி உள்ளது. நேற்று காபூலை தாலிபான் படைகள் கைப்பற்றிய நிலையில் மொத்த நாடும் தாலிபான்கள் வசம் சென்றது.

பல்வேறு மாகாணங்களில் தாலிபான்கள் படைகளிடம் ஆப்கான் ராணுவ வீரர்கள் எந்த மோதலும் இன்றி சரண் அடைந்த காரணத்தால் எளிதாக ஆப்கானிஸ்தான் தாலிபான் படைகள் வசம் சென்றது.

தாலிபான் படைகளின் மூர்க்கத்தனத்தால் பல்வேறு இடங்களில் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் தாலிபான்களிடம் சரண்டர் ஆனார்கள். அதோடு சில ஆப்கானிஸ்தான் வீரர்கள் அருகில் இருக்கும் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு தப்பி ஓடி உள்ளனர். தாலிபான் ஆட்சிக்கு கீழ் இருக்க விருப்பம் இன்றி ஆப்கானிஸ்தான் படையினர் பலர் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு தப்பி சென்று வருகிறார்கள்.

ஆப்கான் ராணுவ வீரர்கள் பலர் உஸ்பெகிஸ்தானுக்கு தப்பி ஓடி வரும் நிலையில்தான் ஆப்கானிஸ்தான் ராணுவ விமானம் உஸ்பெக்கிஸ்தானில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது. உஸ்பெக்கிஸ்தானின் தென்மேற்கு சுர்சோன்டார்யோ பகுதியில் இந்த விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. நேற்று இரவில் விமானம் விபத்துக்கு உள்ளான நிலையில் இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆப்கானிஸ்தானில் இருந்து விமானம் மூலம் ராணுவ வீரர்கள் தப்பிச்செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல இப்படி ராணுவ விமானம் மூலம் தப்பி செல்கிறார்கள்.

விமானத்தில் இருந்த 2 ஆப்கான் விமானிகள் காயங்களோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதில் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்ப முயன்ற இந்தியர்கள் சிலரும் இந்த விமானத்தில் இருந்ததாக தகவல்கள் வருகின்றன.

முன்னதாக ஆப்கானிஸ்தானில் 88 ராணுவ வீரர்கள் உஸ்பெகிஸ்தான் தப்பிச்செல்லும் போது உஸ்பெகிஸ்தான் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here