விமான நிலையத்தை உடைத்துக் கொண்டு உள்ளே ஓடும் பொதுமக்கள்..

ஆப்கான் நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல விமான நிலையம் மற்றும் நாட்டின் எல்லைப்பகுதிகளுக்கு விரைந்தனர்.

ஆப்கானிஸ்தானை  20 ஆண்டுகளுக்கு பின்னர் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தாலிபான்களின் ஆட்சியில் இஸ்லாமியச் சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டும் என்ற அச்சத்தில் அந்நாட்டை விட்டு வெளியேற விரும்பிய மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.

தாலிபான்கள் மீண்டும் ஆப்கானை கைப்பற்றியதால் பெண்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பெண் கல்வி மறுக்கப்படும். கட்டாயம் புர்கா அணிய வேண்டும். ஆண் துணை இல்லாமல் பெண்கள் பொது இடத்துக்கு வர தடைவிதிக்கப்படும். மீறினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

ஆப்கானிஸ்தானை அமெரிக்கப் படைகள் கட்டுக்குள் வைத்திருந்த  இந்த 20 ஆண்டுகளில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அரசுப்பணிகள், அரசியலில் பெண்களின் பங்களிப்பு இருந்தது. மீண்டும் 20 ஆண்டுகள் பின்நோக்கி செல்ல ஆப்கான மக்கள் விரும்பவில்லை.

இந்நிலையில்தான் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல விமான நிலையம் மற்றும் நாட்டின் எல்லைப்பகுதிகளுக்கு விரைந்தனர்.  காபூல் விமானநிலையத்தில் குவிந்திருக்கும் மக்கள் கூட்டம், ஓடுதளத்தில் செல்லும் விமானத்தில் ஏதோ பேருந்தில் ஃபுட்போர்ட் அடிப்பது போல் மக்கள் ஓடிச்சென்று ஏறியும் அவல காட்சிகளை காணமுடிந்தது. விமான சக்கரங்களில் பயணித்த மக்கள் விமானத்தில் இருந்து விழுந்து இறக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் #Kabulhasfallen #Kabulairport என்ற ஹேஷ்கேட்டுகளில் ஒரு வீடியோ இணையத்தில் வெளியானது. மக்கள் கூட்டம் காபூல் விமான நிலையத்திற்குள் முண்டியடித்துக்கொண்டு ஓடுகின்றனர். காபூலின் அவலத்தை பாருங்கள் என அந்த வீடியோ வெளியானது.

இந்த வீடியோ சில நிமிடங்களில் ஏராளமான பார்வையாளர்களை பெற்றது. உலக சுகாதார நிறுவனம் என்ன செய்கிறது. உலக வல்லரசு நாடுகளே காபூலை பாருங்கள் என சிலர் இந்த வீடியோ ரீட்வீட் செய்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here