நாட்டின் மக்கள்தொகையில் 38 விழுக்காட்டினர் முழுமையான தடுப்பூசி அளவை பெற்றுள்ளனர்; JKJAV குழு தகவல்

கோலாலம்பூர்: நேற்றைய (ஆகஸ்டு 20) நிலவரப்படி நாட்டின் மக்கள்தொகையில் 38 விழுக்காட்டினர் அல்லது 12,408,803 பேர் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர் என்று கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் ,அணுகல் மற்றும் உத்தரவாத சிறப்பு குழு (JKJAV) தெரிவித்துள்ளது.

JKJAV தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பகிரப்பட்ட ஒரு விளக்கப்படத்தில் நேற்று 483,855 டோஸ் வழங்கப்பட்டது என்றும் முதல் டோஸ் 155,030 பேரும் மற்றும் இரண்டாவது டோஸ் 328,825 பேரும் பெற்றுள்ளனர்.

மேலும் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 17,961,600 அல்லது மக்கள்தொகையில் 55 விழுக்காடு ஆகும். அதே நேரத்தில் தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (PICK) கீழ் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30,370,403 என்றும் தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த PICK பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here