எனது நீண்ட நாளைய நண்பர் ‘டேவிட் பாலாவை’ இழந்தேன்: இராமசாமி இரங்கல்

எனது நீண்ட கால  நண்பர், டேவிட் பாலா நேற்று ஆகஸ்ட் 31, 2021 அன்று காலமானார் என்ற துயரச் செய்தி நேற்று அவரது மனைவியால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது என்று பினாங்கு மாநில துணை அமைச்சரும் பேராசிரியருமான பி.இராமசாமி தெரிவித்தார்.

பாலா முன்னாள் டிஏபி தலைவரும் தொழிற்சங்கவாதியுமான வி டேவிட்டின்  உதவியாளர் ஆவார். உண்மையில், அவருடைய முன்னாள் வழிகாட்டியுடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததால் மக்கள் அவரை “டேவிட்” என்று அழைக்கத் தொடங்கினர்.

பாலா நாட்டில் நன்கு அறியப்பட்ட நபராக இருந்தார். அவருக்கு பல்வேறு அரசியல்  நண்பர்கள் இருந்தபோதிலும், அவர் எப்பொழுதுமே  எதிரணி மற்றும் பக்காத்தான் ஹரப்பானுக்கு ஆதரவாக இருந்தார். பாலா மிகவும் நேர்மையானவர்.  அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு நான் அவருடன் சுருக்கமாக உரையாடினேன். சில காலமாக அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தார்.

பாலாவின் மரணம் நாட்டில் நியாயமான ஆட்சியை விரும்புவோருக்கு பெரும் இழப்பாகும். அவர் அன்வர் இப்ராகிம் மற்றும் லிம் கிட் சியாங்கின் சிறந்த ஆதரவாளராக இருந்தார்.

நான் எனது நண்பரை இழந்துள்ளேன். உண்மையில், அவருடைய அரசியல் மற்றும் தொழிற்சங்க அனுபவங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும் என்று அவர் இறப்பதற்கு முன் நான் அவருக்கு பரிந்துரைத்தேன்.

அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று இராமசாமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here