பெண்கள் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்

Healthy foods containing vitamin D. Top view

பெண்கள் உடல் எடையை குறைக்கவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, பொலிவான சருமத்தை பெறவும் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இந்த வாரத்தை நடத்துகிறது.அனைத்து வயதினரும் தங்கள் அன்றாட உணவில் கவனம் செலுத்த வேண்டும். சரியான உணவை உட்கொள்வது ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நோய்த்தொற்றுகள் நம்மை அண்டாமல் இருக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

எனவே தேசிய ஊட்டச்சத்து வாரத்தில் பெண்கள் உடல் எடையை குறைக்கவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, பொலிவான சருமத்தை பெறவும் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

முட்டை: பெண்கள் தினசரி உணவில் முட்டை கட்டாயம் இருக்க வேண்டும். முட்டையில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்திருப்பதால் தினமும் சாப்பிடுவது நல்லது. நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய தேவையான ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும், நன்கு முடி வளரவும் உதவுகிறது.

ஆளி விதை : ஆளி விதையில் அதிக அளவு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. எனவே ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த சத்துக்களை நாம் எளிதாக பெற முடியும். இரண்டு தேக்கரண்டி ஆளி விதையில் 2.8 கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. நீங்கள் தினமும் சாப்பிடும் சாண்ட்விச், தானியங்கள், ஸ்மூத்தி, தயிர் அல்லது ரொட்டியுடன் ஆளி விதைகள் சேர்த்து சாப்பிடலாம். ஆளி விதைகள் செரிமானம் ஆவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வதால் விதைகளை பொடி செய்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பால்: பால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. இதில் உடலின் வலிமையை அதிகரிக்க உதவும் பல்வேறு ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்துள்ளன. பாலில் கால்சியம், வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ், புரதம், கொழுப்பு மற்றும் கார்போஸ் ஆகியவை உள்ளன. தினசரி காலையில் சூடான பாலை உட்கொண்டு வந்தால் எலும்புகள் வலிமையாகும். தூக்கமின்மையால் அவதிப்படும் நபர்கள் இரவில் பால் பருக வேண்டும். இரவில் பால் உட்கொள்வதன் மூலம், செரிமானப் பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்க முடிகிறது.

ஆப்பிள்: ஆப்பிள் பழத்தில் நமது உடலுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது. ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. இதில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மூளை, நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. குறிப்பாக பெண்களின் இரத்த இழப்பை தடுக்கவும், மலச்சிக்கலை போக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் ஆப்பிள் உதவுகிறது.

ஓட்ஸ்: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஓட்ஸ் சிறந்த உணவாக இருக்கும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும், அதே நேரத்தில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது. ஓட்ஸில் உள்ள பீட்டா குலுக்கன் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை சாப்பிட்டு வர உடல்சோர்வு நீங்கும், அடிவயிற்று வலியும் குறையும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here