வீட்டின் கழிப்பறையில் ராஜநாகம் ; பெர்லிஸில் சம்பவம்

கோலாலம்பூர்: பெர்லிஸில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டின் கழிப்பறையில் ஒரு ராஜநாகத்தை கண்டபோது மிகவும் பயமடைந்ததாகவும், பின்னர் அப்பகுதியில் பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவரான முகமட் ஹபீஸ் அலியாஸ் என்பவரை பாம்பைப் பிடிக்க உதவி கேட்டு, அக் குடும்பத்தினர் அவரைத் தொடர்பு கொண்டனர்.

முகமட் ஹபீஸ் அலியாஸ் அவர் விஷ பாம்பைப் பிடிக்கும் காட்சிகளைப் டிக்டோக்கில் ஒரு வீடியோ மூலம்ப கிர்ந்துள்ளார்.”பெர்லிஸின் பாம்புகளின் ராஜா” என்று அழைக்கப்படும் 30 வயதான ஹபீஸ், “எனது டிக்டோக்கில் உள்ள வீடியோ என் வீட்டில் நடக்கவில்லை, நாகப்பாம்பைப் பிடிக்க உதவுமாறு இங்குள்ளவர்கள் என்னிடம் கேட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

“அக் குடும்பத்தினர் கழிவறை கிண்ணத்தில் ஒரு பாம்பின் வாலைப் பார்த்தார்கள் என்றும், இப்போது காலநிலை சூடாக உள்ளதால் பாம்பு குளிர்ச்சியைத் தேடி கழிவறைக்கு வந்திருக்கலாம் ” என்று அவர் கூறினார்.

நீண்ட காலமாக பாம்பு பிடித்தலில் ஈடுபட்டுள்ள ஹபீஸ், பெர்லிஸில் வசிப்பவர்கள், குறிப்பாக அவர் வசிக்கும் இடத்தைச் சுற்றி, அடிக்கடி அவரது சேவைகளைப் பெறுவதாகத் தெரிவித்தார். உதவி கேட்ட எவரிடமும் எந்த கட்டணமும் வசூலிக்காமல் தானாக முன்வந்து வேலை செய்ததாகவும் அவர் கூறினார்.

“நான் கடவுளின் காரணமாக வேலை செய்கிறேன், பாம்புகளை பிடிப்பது ஆபத்தானது, ஆனால் நான் கடவுளை நம்புகிறேன், ஏனென்றால் நான் மக்களுக்கு உதவ விரும்புகிறேன்,” என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஹஃபிஸ் சமூகத்திற்கு உதவி செய்வதில் மலேசிய சிவில் பாதுகாப்புப் படை ஆணையரின் அங்கீகாரத்தையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here