மின்சாரம் மற்றும் சமையலறை பொருட்களை மோசடியாக விற்றதாக தாய் மற்றும் மகள் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலாம்: 41,645 வெள்ளி இழப்பு சம்பந்தப்பட்ட மின்சாதன பொருட்கள் மற்றும் சமையலறை பாத்திரங்கள் விற்பனை தொடர்பாக நேற்று (செப்.13) ஒரு பெண் மற்றும் அவரது தாயார் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

நூருல் யாஸ்மின் ரோஸ்லி(32) மற்றும் அவரது தாயார், மெலாத்தி ஜைனோல்(54) ஆகிய இருவருக்கும் எதிராக அனைத்து குற்றச்சாட்டுகளும் மாஜிஸ்திரேட் சப்ரீனா பகார் @ பஹாரி முன்பு வாசிக்கப்பட்ட பிறகு, அவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று மறுப்புத் தெரிவித்தனர்.

முதலாவது குற்றச்சாட்டு முதல் ஆறாவது குற்றச்சாட்டுகளின் பிரகாரம், நூருல் யாஸ்மின் ஆறு நபர்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அத்தோடு மின்சாதனங்கள் மற்றும் சமையலறை பொருட்களை கொள்முதல் செய்யும் பொருட்டு, மெலாத்தி என்பவரது பெயரில் உள்ள கொங் லியோங் வங்கி கணக்கில் 17,541 வெள்ளி வைப்பிலிடுமாறும் வலியுறுத்தினார். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு குற்றம் சாட்டப்பட்டவர் வாக்குறுதியளிக்கப்பட்ட பொருட்களை வழங்கத் தவறிவிட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர் மீது குற்றவியல் சட்டப் பிரிவு 415 -ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதே சட்டத்தின் பிரிவு 417 -ன் கீழ் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வழி கோலுகின்றது.

அடுத்து ஏழாவது முதல் 12 வது குற்றச்சாட்டுகளிம் படி, நூருல் யாஸ்மின் மற்றய ஆறு நபர்களுக்கு சொந்தமான 19,548 வெள்ளியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார், இதுவும் மின்சாதன பொருட்கள் மற்றும் சமையலறை பாத்திரங்கள் வாங்குவதற்கான கட்டணமாக மெலாத்தி என்ற பெயரிலுள்ள ஒரு வங்கி கணக்கு மூலம் அவருக்கு ஒப்படைக்கப்பட்டது.

இதற்காக அவர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 403 ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படிகள், மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதமும் விதிக்க முடியும்.

அனைத்து குற்றங்களும் புக்கிட் ஜெலுதோங், ஷா ஆலம் மற்றும் சுங்கை பூலோவில் நவம்பர் 27, 2020 மற்றும் ஜூன் 13, 2021 க்கு இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அத்தோடு மெலாத்தி மற்றும் நூருல் யாஸ்மின் ஆகியோர் மேலும் இரண்டு நபர்களை ஏமாற்ற சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதே பொருட்களை வாங்குவதற்காக, மெலாத்தி என்ற பெயரில் உள்ள வங்கி கணக்கில் 4,556 வெள்ளியை செலுத்தினார்கள்.

அவர்கள் மே 28 மற்றும் ஜூலை 24, 2021 அன்று சுபாங் ஜெயா மற்றும் ஷா ஆலாமில் இந்தச் செயலைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தண்டனைச் சட்டம் பிரிவு 415 இன் கீழ் குற்றம் சாட்டப்படுகிறது.

துணை அரசு வழக்கறிஞர் முகமட் கிவாமுதீன் முஸ்தபா ஷக்ரி வழக்கு தொடர்ந்தார், அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் சார்பாக வழக்கறிஞர் ஷலேஹுதீன் சலாம் ஆஜராகினார்.

நீதிமன்றம் நூருல் யாஸ்மினுக்கு 15,000 வெள்ளி பிணையும் மற்றும் மெலாத்திக்கு 3,000 வெள்ளி பிணையும் வழங்கியது, மேலும் நவம்பர் 15 ஆம் தேதி விசாரணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here