தேசிய உயர்கல்வி நிதிக் கழகம் (PTPTN) 2025-ஆம் ஆண்டிற்கான Simpan SSPN சேமிப்பிற்கு 4.10% என்ற போட்டித்தன்மை மிக்க லாப ஈவை (Dividen) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பை PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் 2026 மே 6ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள மெனாரா PTPTN-இல் வெளியிட்டார். இந்த நிகழ்வில் PTPTN தலைமைச் செயல் அதிகாரி அமாட் டசுக்கி அப்துல் மஜிட், நிர்வாகக் குழுவினர், மற்றும் வியூகப் பங்காளிகள் கலந்து கொண்டனர்.
போட்டித்தன்மை மிக்க லாபப் பகிர்வு
இந்த 4.10% லாப ஈவு பகிர்வு மூலம் மொத்தம் 6.07 மில்லியன் Simpan SSPN வைப்பாளர்கள் பயனடைவார்கள். இதற்காக RM 505.68 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2004-இல் Simpan SSPN அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை வழங்கப்பட்ட மொத்த டிவிடெண்ட் தொகை RM 2.63 பில்லியனை எட்டியுள்ளது.
இந்த லாப ஈவு தொகை நேரடியாக வைப்பாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். வைப்பாளர்கள் தங்களின் சேமிப்பு அறிக்கையை மே 7, 2026 முதல் myPTPTN செயலி வழியாக சரிபார்த்துக் கொள்ளலாம்.
11 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச லாப ஈவு
2024-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 4.05% லாப ஈவுடன் ஒப்பிடும்போது, 2025-ஆம் ஆண்டிற்கான 4.10% விகிதம் மிக உயர்வானதாகும். இது கடந்த 11 ஆண்டுகளில் வழங்கப்பட்டதைவிட மிக உயர்ந்த லாப ஈவு பகிர்வு விகிதம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
நேர்மையான, ஆக்கப்பூர்வமான நிதி மேலாண்மை
டத்தோஸ்ரீ நோர்லிஸா தலைமையிலான நிர்வாகத்தின் திறமையான, நேர்மையான நிதி மேலாண்மைக்கு இந்த உயர்வு ஒரு சான்றாகும். இந்தச் சாதனையை உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டிராஜா டாக்டர் ஸம்ரி அப்துல் காடிர் முழுமையாக ஆதரித்துள்ளார். இது PTPTN நிதி நிர்வாக அடைவுநிலை மற்றும் போட்டித்தன்மைக்கு ஈடுகொடுக்கும் செயல்திறன் ஆகியவற்றுக்கான அமைச்சரின் அங்கீகாரமாகவும் ஊக்கமாகவும் விளங்குகிறது.
ஆக்க முதலீடு, சிறந்த வியூகம்
உள்நாட்டு நிதிச் சந்தை, சுக்குக் (Sukuk) எனப்படும் இஸ்லாமிய நிதி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட குறுகிய, நீண்ட காலஷரியா அடிப்படையிலான முதலீட்டு உத்திகள் மூலம் இந்த வளர்ச்சி சாத்தியமானது என்று டத்தோஸ்ரீ நோர்லிஸா தெரிவித்தார். இந்த முதலீட்டு முறை அசலைப் பாதுகாப்பதுடன், நிலையான வருமானத்தையும் உறுதி செய்கிறது. குறிப்பாக 2025 முழுவதும் பேங்க நெகாரா மலேசியாவின் ஓவர்நைட் பாலிசி விகிதம் (OPR) 2.75% ஆக இருந்த நிலையில் 4.10% லாப ஈவு என்பது மிகச் சிறந்த நிகர லாபமாகும்.
பெருமைமிக்க வளர்ச்சி
2025-ஆம் ஆண்டில் Simpan SSPN பெற்ற மொத்த வைப்புத் தொகை RM 3.33 பில்லியன் ஆகும். இது 2024-ஆம் ஆண்டுடன் (RM 3.17 பில்லியன்) ஒப்பிடும்போது RM 154.10 மில்லியன் அல்லது 4.85% அதிகமாகும். கடந்த ஆண்டில் மட்டும் 500,000-க்கும் அதிகமான புதிய கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, மொத்த சேமிப்புத்தொகை RM 23.88 பில்லியனை எட்டியுள்ளது.
Simpan SSPN மீது வைப்புத் தொகையாளர்கள் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையும் வலுவான ஆதரவும் இந்த மகத்தானவெற்றிக்கு வித்திட்டிருக்கிறது என்று டத்தோஸ்ரீ நோர்லிஸா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
கூடுதல் சலுகைகள், அதிகமான அனுகூலங்கள்
பிள்ளைகளின் உயர்கல்விக்காகச் சேமிக்க
கடந்த 11 ஆண்டுகளில் ஆக உயர்வான லாப ஈவு
- லாப ஈவு வழங்க RM 505.68 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 07 மில்லியன் Simpan SSPN வைப்புத் தொகையாளர்கள் பலன் பெறுவர்.
- 2004ஆம் ஆண்டில் Simpan SSPN அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மொத்தம் RM 2.63 மில்லியன் லாப ஈவுவழங்கப்பட்டுள்ளது.
- 7 மே 2026 முதல் Simpan SSPN கணக்குகளில் லாப ஈவு தொகை சேர்க்கப்படும்.
- மொத்தம் RM 3.33 பில்லியன் வைப்புத்தொகையுடன் 2025 Simpan SSPN பெருமைமிகு வகையில்உயர்அடைவுநிலையைச் சாதித்திருக்கிறது.
-டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம்
Simpan SSPN ஒரு சிறந்த தளமாகும். இதன் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
- ஆண்டுக்கு RM 8,000 வரை வருமான வரி விலக்கு.
- இலவச தக்காஃபுல் (Takaful) பாதுகாப்பு.
- தகுதியுள்ள குடும்பங்களுக்கு RM 10,000 வரை இலவச ஊக்கத்தொகை (Geran Sepadan).
- அரசாங்க உத்தரவாதம் மற்றும் ஷரியா இணக்கம்.
மேலும், பட்ஜெட் 2025-இல் கிரான் பாடானான் இஹ்சான் (Geran Ihsan-GAPAI) திட்டத்தின் கீழ், மாத வருமானம் RM 4,000 முதல் RM 6,000 வரை உள்ள குடும்பங்களும் இப்போது RM 5,000 வரை ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு
மேலதிக விவரங்களுக்கு www.ptptn.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் அல்லது எளிதான, விரைவான மற்றும் பாதுகாப்பான சேவைகளைப் பெற myPTPTN செயலியைப் பயன்படுத்தலாம்.















