கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அக்னி 5.. இந்தியாவின் சோதனையால் மிரளும் சீனா

பெய்ஜிங்: அக்னி 5 ஏவுகணையின் அடுத்தகட்ட சோதனை குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில் சீனா இது தொடர்பாக விமர்சனம் வைத்துள்ளது. அக்னி 5 ஏவுகணை சோதனைக்கு எதிராக சீனா இப்போதே மிரண்டு போய் கண்டங்களை தெரிவிக்க தொடங்கி உள்ளது.

இந்தியாவின் அணு ஆயுத ஏவுகணைகளில் அக்னி 5தான் இப்போது அதிக தூரம் சென்று தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணை ஆகும். அக்னி 6 உருவாக்கப்பட்டு வருகிறது. 5000 கிமீ வரை சென்று இந்த அக்னி 5 ஏவுகணை தாக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதன் உண்மையான தாக்குதல் தூரம் இதை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்னி 4 ஏவுகணைகள் வரை அதிக தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் இந்தியாவிடம் இல்லை. முக்கியமாக சீனாவின் கிழக்கு பகுதிகளை தாக்கும் திறன் இந்தியாவிடம் இல்லை.

ஆனால் தற்போது இருக்கும் அக்னி 5 ஏவுகணை மூலம் சீனாவின் எந்த எல்லை பகுதியையும், எந்த நகரத்தையும் தாக்க முடியும். இதன் திறன், தூரம், வேகம் ஆகியவற்றை மாற்றும் முயற்சியில் தற்போது இந்தியா ஈடுப்பட்டு வருகிறது. இதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் டிஆர்டிஓ விரைவில் அக்னி 5 ஏவுகணையின் 8ம் கட்ட சோதனையை மேற்கொள்ள இருக்கிறது.

விரைவில் இதன் 8ம் கட்ட சோதனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் அக்னி 5 ஏவுகணையின் 8 ம் கட்ட சோதனை குறித்த செய்திகள் இப்போதே சீன ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் எந்த பகுதிக்கும் சென்று தாக்கும் அணு ஆயுத ஏவுகணை இது என்பதால் சீனா கொஞ்சம் நடுக்கத்தில் உள்ளது. இந்த நிலையில்தான் சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாக ஷாவ் லிஜியன் இந்தியாவின் இந்த ஏவுகணை சோதனையை விமர்சனம் செய்துள்ளார்.

ஷாவ் லிஜியன் அளித்த பேட்டியில் இந்தியா அணு ஆயுத ஆற்றல் கொண்ட அக்னி 5 ஏவுகணையை சோதனை செய்வதற்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 1172 விதி உள்ளது. இது தொடர்பாக அந்த விதியில் சில முக்கிய பிரிவுகள் உள்ளது. இந்தியா 1998ல் அணு ஆயுத சோதனை மேற்கொண்டது. அதன்பின் 1998ல் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் 1172 விதி எண் பிரிவு கொண்டு வரப்பட்டது. அதன்படி பாகிஸ்தானும், இந்தியாவும் உடனடியாக அணு ஆயுதங்களை சோதனை செய்வதை நிறுத்த வேண்டும்.

அணு ஆயுத ஆராய்ச்சிகளை செய்வதையும், அணு ஆயுத ஏவுகணைகளை தயாரிப்பதையும் நிறுத்த வேண்டும். கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரிப்பதையும் நிறுத்த வேண்டும். இது தொடர்பான தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி செய்ய கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதை மீறி இந்தியா அக்னி 5 சோதனையை மேற்கொள்ள கூடாது. ஆசியாவின் அமைதிக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் விதியில் இந்தியாவை போலவே பாகிஸ்தானுக்கு எதிராகவும் சட்டங்கள் உள்ளன. இந்தியாவை எதிர்க்கும் சீனா, பாகிஸ்தானுக்கு மட்டும் அணு ஆயுத ஆராய்ச்சியில் உதவிகளை செய்து வருகிறது. 2018 வரை இரண்டு நாடுகளும் ரகசியமாக அணு ஆயுத உறவுகளை மேற்கொண்டு வந்தது. 2018 பின் சீனா வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு உதவ தொடங்கியது. இப்படி இருக்கும் போது ஆசியாவின் அமைதி என்றெல்லாம் சீனா விளக்கம் சொல்வது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here