மழை தொடர்ந்தால் சிம்பாங் புலாய்-கேமரன்மலை சாலையின் விரிசல் மோசமடையக்கூடும்

ஈப்போ: ஃபெடரல் நெடுஞ்சாலை 185-இல், ஜாலான் சிம்பாங் புலாய்-ப்ளூ வேளியில் இருந்து கேமரன்மலை நோக்கி செல்லும்  சாலையில் ஏற்பட்டிருக்கும்  விரிசல்,  மழை தொடர்ந்தால் மோசமாகலாம் என்று பேராக் மந்திரி பெசார் சாரணி முகமது கூறினார்.

அந்த இடத்தில் ஆரம்ப கட்ட விசாரணையில் சாலையில் 30 மீட்டர் நீளமுள்ள விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றார். தொடர்ச்சியான மழை காரணமாக மண்ணின் தரம் பலவீனமாகவும் நிலையற்றதாகவும் மாறியது.

கிந்தா பொதுப்பணித் துறை (JKR) நேற்று மாலை 5.20 மணியளவில் இந்த சம்பவம் குறித்த அறிக்கையைப் பெற்றவுடன்  அந்த இடத்தில் ஒரு போக்குவரத்து மேலாண்மைத் திட்டத்தை தயாரிப்பதற்காக உடனடி நடவடிக்கை எடுத்தது என்று அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

பெடரல் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டதாக அவர் கூறினார். வாகனமோட்டிகள் பெடரல் நெடுஞ்சாலை 59 ஜாலான் தாப்பா-கேமரன் ஹைலேண்ட்ஸை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தலாம்  என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பேராக் ஜே.கே.ஆர் இயக்குநர் சுல்கிப்ளி நஸ்ரி தற்காலிக பாதை இலகுரக வாகனங்களுக்கு மட்டுமே திறக்கப்படும் என்று கூறினார். டிசம்பரில் செயல்படுத்த திட்டமிடப்பட்ட இடத்தில் 600 மீட்டர் பாதையை சீரமைக்க அரசாங்கம் 130 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது என்றார். இப்பாதையில் பழுதுபார்க்கும் பணி இன்னும் வடிவமைப்பு நிலையில் உள்ளது. டிசம்பர் 2024 இல் முடிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here