தாய்லாந்து குடிவரவுத்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒப்பனை தொழில்முனைவர் நூர் சஜத்; மலேசியாவிற்கு நாடுகடத்தப்படுவார்

கோலாலம்பூர்: குடியேற்ற குற்றத்திற்காக தாய்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய ஒப்பனை தொழில்முனைவர் நூர் சஜத் கமாருஸ் ஜமானை கொண்டு வருவதற்கான பணியில் மலேசியா ஈடுபட்டுள்ளது.

புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோஸ்ரீ அப்த்துல் ஜலீல் ஹசான் இச்சம்பவம் பற்றி கூறுகையில் , நூர் சஜத் என்று அழைக்கப்படும் முகமட் சஜ்ஜாட், தாய்லாந்து குடிவரவுத்துறையினரால் செப்டம்பர் 8 மாலை 6 மணியளவில் தவறான பாஸ்போர்ட் வைத்திருப்பதற்காக தடுத்து வைக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.

செப்டம்பர் 9 ஆம் தேதி, குடியேற்றக் குற்றத்திற்காக சந்தேகநபர் தாய்லாந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் பின்னர் தண்டிக்கப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

பொது ஊழியர் தனது பொதுச் செயல்பாடுகளைச் செய்வதற்கு இடையூறு செய்ததற்காகவும், மேலும் ஒரு பொது அதிகாரியின் மீது குற்றச்சக்தியை பயன்படுத்தியதற்காகவும் அவர் “மலேசியாவின் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 186 மற்றும் 353 ன் கீழ் சந்தேக நபர் தேடப்பட்டு வருகிறார்” என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் “நூர் சஜித்தை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றும் அப்துல் ஜலீல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here