சீன தொலைபேசிகளை தூக்கி எறியுங்கள் ; லிதுவேனியாவின் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை !

லிதுவேனியா நாட்டு மக்கள் தங்களின் சீன தொலைபேசிகளை தூக்கி எறிந்துவிட வேண்டும் என்றும் புதியவற்றை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் தனது நாட்டு மக்களுக்கு லிதுவேனியாவின் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ஜியோமி கைபேசியின் எம்.ஐ.10 ரி 5 ஜீ கைபேசி ஐரோப்பிய ஒன்றியத்தில் செயல் இழக்கச் செய்யப்பட்டிருந்த போதிலும் எந்த நேரத்திலும் அதனைத் தொலைவிலிருந்து இயக்க முடியும் என்பதே இதற்கான காரணம் என லித்துவேனியா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

லிதுவேனியா நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் அறிக்கையின்படி, சீன உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்த 5 ஜி மொபைல்களை சோதனை செய்தது. அதில் ஒரு சியோமி போனில் (Xiaomi phone) உள்ளமைக்கப்பட்ட தணிக்கை கருவிகள் உள்ளன, மற்றொரு ஹவாய் மாடல் (Huawei model) பாதுகாப்பு குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்று  கண்டுபிடிக்கப்பட்டது .

“எங்கள் பரிந்துரை புதிய சீன தொலைபேசிகளை வாங்கக் கூடாது என்பதோடு, ஏற்கனவே வாங்கியவற்றை விரைவாக நியாயமான முறையில் அகற்றுவது” என்று லிதுவேனியா பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் மார்கிரிஸ் அபுக்கேவிசியஸ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here