கனடா தன் பூர்வீகக்குடிமக்களுக்கு காலாவதியான கோவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தியதா?

ஒன்ராறியோவில் பூர்வீகக்குடி மக்களுக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக காலாவதியான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரையில் சுமார் 71 டோஸ் காலாவதியான தடுப்பூசிகள் பூர்வீகக்குடி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளின் காலாவதி தேதி குறித்து தாதியர்கள் தடுப்பூசி மையங்களுக்கு புகார் அளித்துள்ளனர். ஆனால் குளிரூட்டப்பட்ட அறைகளில் குறித்த தடுப்பூசிகள் பாதுகாக்கப்படாமல் அவை காலாவதியானது தொடர்பில் தாதியர்கள் உணர்ந்து கொள்ளவில்லை என்றே இதற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் அந்த தடுப்பூசிகள் குளிரூட்டப்படாமல் இருந்துள்ளதால் அதன் காலாவதி வெறும் 31 நாட்களில் முடிவடைகிறது. புதிய காலாவதி தேதியானது தடுப்பூசிகளுக்கான பெட்டியில் குறிப்பிட்டுள்ளார்கள், ஆனால் தடுப்பூசி போத்தல்களில் குறிப்பிடப்படவில்லை.

சில பூர்வீகக்குடி மக்களுக்கு குறித்த தடுப்பூசி காலாவதியானதன் அடுத்த நாள் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை சிலருக்கு சில வாரங்களுக்கு பிறகு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது காலாவதியான தடுப்பூசி பெற்றுக்கொண்ட பூர்வீகக்குடி மக்களை சுகாதார ஊழியர்கள் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here