தாய்லாந்தில் சோகம்: வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து – 11 பேர் பலி…

பாங்காக் தாய்லாந்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஆசியாவில் அமைந்துள்ள நாடு தாய்லாந்து. நூற்றுக்கணக்கான தீவுகளை கொண்ட தாய்லாந்து பல்வேறு சுற்றுலா தளங்களை கொண்டதாகும். இந்நாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

தீ விபத்து – 11 பேர் பலி
அந்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா பகுதியான பங்கெட் தீவில் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் உணவகங்கள், வாடகை குடியிருப்புகள், இரு சக்கர வாகன வாடகை கடைகள் உள்பட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன.

இந்த வணிக வளாகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீ மளமளவென வணிக வளாகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், தீ விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பாங்காக்கில் உள்ள கேளிக்கை விடுதியில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here