அறுவை சிகிச்சையின்போது அழுதது ஒரு குற்றமா? – அதுக்கும் கட்டணம் வசூலித்த மருத்துவமனை

Brief emotion என்ற பெயரில் அழுததற்காக தனியாக கட்டணம் வாங்கியிருக்கிறது அந்த மருத்துவமனை நிர்வாகம். அறுவை சிகிச்சையின் போது அழுதேன் என்பதற்காக எனக்கு ஒரு தொகையை மருத்துவமனை நிர்வாகம் கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்திருப்பதாக பெண் ஒருவர் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுவாக அறுவை சிகிச்சை என்றாலே பயம் தரக்கூடியதாக தான் இருக்கும். அப்போது மருத்துவர்களிடம் பயத்தில் கையை பிடித்து இழுப்பது, அழுவது, கத்துவது போன்ற செயல்களில் சில நேரங்களில் நோயாளிகள் ஈடுபடுவதுண்டு. அதே போலத்தான் அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மிட்ச் என்ற பெண்மணி ஒருவர் மச்சத்தை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சைக்கு முன்னர் எமோஷனலாக இருந்துள்ளார். அவர் உணர்ச்சிவசப்பட்டு பயத்தில் அழுதிருக்கிறார். இதெல்லாம் சகஜம் என்ற நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் தரப்பட்ட பில்லை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.

அறுவை சிகிச்சையின் போது அழுததற்காக அவருக்கு பில் தொகை தனியாக வந்திருந்ததால் தான் அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். Brief emotion என்ற பெயரில் அழுததற்காக பில்லாக 11 டாலர்கள் பில் தொகை மருத்துவமனை கட்டண ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மச்சத்தை அகற்றுவதற்கு 223 டாலர்களும், அப்போது அழுததற்காக 11 டாலர்களும் கட்டணம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மருத்துவமனை தனக்கு அளித்த பில் கட்டண ரசீதை மிட்ச், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த அழுகை கட்டண விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here