பதிவு செய்யப்படாத Ivermectin தயாரிப்புகள் அதிகாரிகளால் பறிமுதல்

மலாக்கா: கிளினிக்குகள், மருந்தகங்கள் மற்றும் ஆன்லைன் விற்பனையாளர்களிடம் நடத்தப்பட்ட ஏழு சோதனைகளில் பதிவு செய்யப்படாத ஐவர்மெக்டின் (Ivermectin) மருந்துகளை மாநில சுகாதார அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.இதன் மதிப்பு 8,240 வெள்ளியாகும்.

மாநில சுகாதார நிர்வாக கவுன்சிலர் ரஹ்மத் மாரிமான், சுகாதார அமைச்சகத்தில் பதிவு செய்யப்படாத பொருட்கள் விற்பனை மருந்து கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுவதாக உள்ளது.

இ-காமர்ஸ் தளங்கள் அல்லது சமூக ஊடகங்களில் ஐவர்மெக்டின் விற்பனை குறித்து தெரிவிக்குமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார். அவர்கள் மருந்தகம் அமலாக்கப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், இதனால் பதிவு செய்யப்படாத ஐவர்மெக்டின் தயாரிப்புகளின் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் கூறினார்.

மனித பயன்பாட்டிற்காக அல்லது கோவிட் -19 இன் சிகிச்சை மற்றும் தடுப்புக்காக ஐவர்மெக்டின் தயாரிப்பு எதுவும் அங்கீகரிக்கப்படவில்லை என்று ரஹ்மத் கூறினார். எனவே ஐவர்மெக்டின் போன்ற பதிவு செய்யப்படாத பொருட்களின் விளம்பரம் மற்றும் விற்பனையில் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

கோவிட் -19 இன் சிகிச்சை மற்றும் தடுப்புக்கு ஐவர்மெக்டின் பயன்பாட்டின் செயல்திறன் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றும், தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் ஐவர்மெக்டின் ஒரு ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விலங்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட முடியும் என்றும் கூறியுள்ளது.

நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் சுகாதாரப் பொருட்கள் ஹோலோகிராம் பாதுகாப்பு ஸ்டிக்கர் மற்றும் தயாரிப்பு பதிவு எண் (MAL) இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here