போதைப்பொருள் கடத்தல் தொடர்பான போலீஸின் ஆய்வில், கடத்தல்காரர்கள் கோரியர் சேவையை பயன்படுத்தியது அம்பலம்

கோலாலம்பூர்: மலேசியா மற்றும் சிங்கப்பூர் இணைந்த போலீஸ் விசாரணையில் அனைத்துலக போதைப்பொருள் விநியோக வளைய கும்பல் சிக்கியுள்ளது.

மலேசியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல சிங்கப்பூர் நாட்டின் கோரியர் சேவையை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதாக போலீசார் நம்புகின்றனர்.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. மேலும் பொம்மைகள் மற்றும் மத பிரமுகர்களின் படச்சட்டங்கள் போன்றவற்றுக்குள் வைக்கப்பட்டும்
போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன.

புதன்கிழமை (அக்டோபர் 6) நடந்த ஓர் செய்தியாளர் சந்திப்பில், புக்கிட் அமான் போதைப்பொருள் குற்ற விசாரணைத் துறை துணை இயக்குநர் (சொத்து இழப்பு, சட்டம் மற்றும் தடுப்பு) துணை அதிகாரி டத்தோ அப்துல் அஜிஸ் அப்துல் மஜிட் கூறுகையில், கடந்த செப்டம்பர் 24 மற்றும் 28 ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 5 சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், காஜாங், கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலானில் மொத்தம் ஆறு போதைப்பொருள் முறியடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

“நாங்கள் 5.8 கிலோ மெத், 14.8 கிலோ கெத்தமைன் மற்றும் 64.4 கிலோ MDMA உள்ளிட்ட ஐந்து வகையான போதைமருந்துகளை திரவ மற்றும் தூள் வடிவில் கைப்பற்றினோம்,” என்று அவர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 4.9 வெள்ளி மில்லியன் என போலீசார் மதிப்பிட்டனர்.

மேலும் விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் சம்மந்தப்பட்ட 11 வங்கி கணக்குகளும் காவல்துறையினரால் முடக்கப்பட்டன.

இந்த போதைப்பொருள் கடத்தல் குழு இந்தாண்டு ஜனவரி முதல் செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது என்றார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் அடிப்படையில், இந்த குழு சில போதை மருந்து செயலாக்கத்தையும் செய்தது என்று நாங்கள் நம்புகிறோம், இருந்தும் நாங்கள் இது தொடர்பில் இன்னும் விசாரித்து வருகிறோம்.

இந்த போதைமருந்துகள் சிங்கப்பூரைச் சேர்ந்த கோரியர் நிறுவனம் வழியாக ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது.

“இந்த கடத்தல் குழுவின் பல உறுப்பினர்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் DCP அப்துல் அஜிஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here