காணாமல் போனவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் 

கோலாலம்பூர் : கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒருவர், பேராக்கின் தெலுக் இந்தானில் உள்ள லாடாங் செலின்சிங் சாங்காட் பேட்டை சிக்கஸ் ஆற்றின் ஓரத்திலுள்ள மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அந்த நபர் ஏற்கனவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஹிலீர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹமட் அத்னான் பஸ்ரி கூறுகையில், நேற்று பிற்பகல் 2.30 மணியளவில், அலோர்பாங், லங்காப் பகுதியில் உள்ள செம்பனை தோட்டப் பகுதியில் அவரது மோட்டார் சைக்கிள் விடப்பட்ட இடத்திலிருந்து, சுமார் 4 கி.மீட்டர் தொலைவில் 36 வயதான அந்த நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

“அந்த நபரின் உடல் மரத்தில் கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தது”. மேலும் அந்த நபர் மூன்று நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. கண்டுபிடிக்கப்பட்டபோது அவரது உடல்நிலையின் அடிப்படையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது,” என்று அவர்  கூறினார்.

சம்பவ இடத்தில் பரிசோதனைகள் முடிந்த பிறகு, அந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here