100 மீட்டர் நீளம் கொண்ட பதாகை: சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புதிய சாதனை

மலேசிய மடானி எனும் கருப்பொருள் சொல்லை தமிழ், மலாய், ஆங்கிலம் மற்றும் சீனம் ஆகிய மொழிகளில் 17,356 முறை 100 மீட்டர் நீளம் கொண்ட வெள்ளை துணியில் எழுதி, நாட்டில் நீளமான பதாகை எனும் புதிய  சாதனை படைத்துள்ளனர் சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்.
நாட்டின் 66 ஆவது தேசிய தினக் கொண்டாடத்தின் போது இம்முயற்சியை இப்பள்ளி துணை தலைமையாசியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஊழியர் கள்  ஆகியோர் ஒன்றிணைந்த சிந்தனையோடு இப்பள்ளி  மாணவர்கள் இச்சாதனை படைக்க தூண்டுக்கோளாக அமைந்தது  என கூறுகிறார் அப்பள்ளி தலைமையா சிரியர் சிவகுமார்.
மேலும் கருப்பு நிற எழுத்துகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட  இப்பதாகையில், நாட்டின் நடப்பு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட, முன்னாள் பிரதமர் கள் என 10 பேர்களின் உருவங்கள், தமிழ், மலாய், சீனம் ஆகிய எழுத்துகளை கொண்டு வரையப்பட்டுள்ள வேளையில், நம் நாட்டின் புகழ்மிக்க வரலாற்று இடங்கள் எழில்மிகு ஓவியங்களாகவும் இப்பதாகையில் வடிவமைக்கப்பட்டு, அதன் மேல் மலேசிய மடானி எனும் சொல் எழுதப்பட்டுள்ளதை சிவகுமார் சுட்டிக்காட்டினார்.
நம் நாட்டு சாதனை வரலாற்றில், மாணவர்களின் இப்படைப்பு ஒரு புதிய சாதனை யாகும், அதனை மலேசிய சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய தாம் முயற்சி மேற் கொண்டதாகவும், அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது என அவர் குறிப்பிட்டார்.
வாய்ப்பு மறுக்கப்பட்டலும், கிடைக்கமால் போனலும், சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து உலக சாதனை படைக்க ஊக்குவிக்கப்படுவார்கள் என நேற்று அதன் நிறைவு விழாவில்   அவர் அவ்வாறு  நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here